'ஹரிதாஸ்', 'சலீம்', 'ஒரு பக்க கதை', 'வேலைக்காரன்', 'கன்னிராசி', 'முப்பரிமாணம்' என நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் ஈர்க்கிறார் நடிகர் பி.வி.சந்திரமௌலி. தொடர்ச்சியாக எதார்த்த களங்கள் கொண்ட கதை கிடைத்தால் இன்னும் நல்ல இடங்களுக்குப் பயணப்படுவேன் என்கிறார்.
அவரிடம் பேசும்போது, 'சினிமாவுக்கு முன்னே பின்னே சம்பந்தம் இல்லாத குடும்பம். ஆரம்ப காலத்தில் தமிழகக் காவல் துறையில் வேலை. அது என் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. பின்னர் தொழில்ரீதியாக கவனம் செலுத்தினேன். அப்போதுதான் 'ஹரிதாஸ்' படத்துக்காக இயக்குநர் ஜி.என். ஆர். குமாரவேலன் என்னை அணுகினார். போலீஸ் கதை என்பதால் சில தரவுகளைக் கேட்டார். பின்னர் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்தார்.
இந்தப் படம் என் நடிப்பு பயணத் தொடக்கத்துக்குப் பெரும் பலம். சினிமாவின் மேல் வெறும் ஆசையை மட்டும் கொள்ளாமல், அதைப் பற்றி தீவிரமாக தெரிந்து கொண்டேன். ஆனால், சினிமா வாசலுக்கான திறவுகோல் எங்கேயும் இல்லை. பின்னர் விஜய் ஆண்டனி 'சலீம்' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அது பரவலாகப் பேசப்பட்டது.
இப்போது எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறேன். உழைப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை. துக்கம், கவலை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், அன்பு, அழுகை இவையெல்லாம் நிறைய இருக்கிறது. நான் பார்த்து பழகின மனிதர்கள் எல்லாரும் அவ்வளவு நல்லவர்கள். நல்ல நல்ல அனுபவங்கள் கொடுத்தார்கள்.
இவற்றையெல்லாம் விட போராடி வெற்றிபெறத் துடிக்கும் உதவி இயக்குநர்கள், நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப் படைப்பாளிகள் எல்லோருக்கும் என் இடம் பிடிக்கும். அந்தளவுக்கு வருவேன். இப்போது தெரிகிற வெளிச்சம் எல்லாம் அற்புதம். இதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். தேடி வந்தவை நிறைய... நானும் தேடிப் போகிறேன்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆளில்லா சிறிய ரக விமானங்களுக்கான தொழில்நுட்ப வழிமுறைகள்: இந்திய ராணுவம் வெளியீடு
விவசாயிதான் நாட்டின் கதாநாயகன்!
பசித்தவனுக்கு ரொட்டியே கடவுள்!
பயணங்களுக்கான எரிபொருள்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

