சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

படைப்பாற்றலை அதிகரிக்க...

எந்தத் துறையாக இருந்தாலும், நமது திறன்களை மற்றவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

News image
Updated On :21 மார்ச் 2026, 10:41 pm

தினமணி செய்திச் சேவை

எஸ். என்.

எந்தத் துறையாக இருந்தாலும், நமது திறன்களை மற்றவர்களுக்கு உணர்த்தவேண்டும். இதுவே நமது தனிப்பட்ட படைப்பாற்றல் திறன்.

சில வழிகளை நீங்கள் கையாண்டால், ஆரம்பித்த சில நாள்களிலேயே 'என்ன ஆளே மாறிட்டாரே?' என்று நண்பர்கள் கூறுவார்கள். உங்களைப் பற்றிச் சொல்லும்போது, படைப்பாற்றல் திறனுக்கு நன்றியைச் சொல்லிவிட்டு, புன்சிரிப்புடன் அந்தப் புகழ்மொழியை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இதை அதிகரிப்பதற்கான வழிகள் என்னென்ன?

ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு, அதில் ஒன்று முதல் நூறு வரை எண்களை இட்டு வரிசையாக உங்கள் கருத்துகளையும் யோசனைகளையும் எழுதுங்கள்.

சிறிய குழுவாக இருக்கும் நண்பர்களுடன் உங்கள் புதுக் கருத்துகளையும் யோசனைகளையும் விவாதியுங்கள். இருவர் முதல் ஆறு பேர் வரையில் நண்பர்கள் இருந்தால்போதும், அதிகம் பேர் சேர்ந்தால் திட்டம் காலதாமதமாகி விடும்.

உற்சாகம் உயரட்டும். புன்சிரிப்புடன் உற்சாகமாகச் செயல்படுங்கள். 'இது வெற்றியைத் தரும்' என்ற எண்ணமே உற்சாகத்தைத் தரும். உற்சாகமே வெற்றியைத் தரும்.

படம் வரையுங்கள். உங்கள் எண்ணங்களை படமாக்குங்கள்.

 உங்கள் கருத்துகளை உங்களுடன் பேசுங்கள். பல மேதைகள் இந்த உத்தியைக் கடைப்பிடித்தே எண்ணங்களைச் செம்மைப்படுத்தி, அதை நடைமுறைப்படுத்தி இருக்கின்றனர்.

அவசரம் வேண்டாம். பொறுமையாக இருங்கள். ஏமாற்றம் உங்கள் படைப்பாற்றல் திறனைப் பழுதாக்கி விடும். அதிகமான ஆர்வக் கோளாறால், வேகமாக எதையும் ஆரம்பித்தால் அதில் ஏற்படும் தடைகள் உங்களை முற்றிலுமாகச் சீர்குலைத்து விடும். நிதானமாக, படிப்படியாக முன்னேறுங்கள்.

எதிர்பார்ப்பைச் சற்றுக் குறைத்துக் கொள்ளுங்கள். பிரம்மாண்டமான வெற்றி ஒரே நாளில் கிடைத்துவிடாது. மிகவும் பிரமாதமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சரிதான். ஆனால், அதிக எதிர்பார்ப்பு ஒரு தடையாகவே ஆகிவிடும்.

நம்பிக்கையே நமக்கான பலம். நமது தனிப்பட்ட ஆளுமையை நாம் நமது நம்பிக்கையால் வெளிக்காட்ட வேண்டும்.

ஒரே எண்ணத்தைத் திருப்பித் திருப்பி எண்ணி அதைச் செம்மையாக்கப் பாடுபட வேண்டாம். நமக்கு வேண்டுவது திரளான யோசனைகள்தான்.

 உங்களது யோசனைகளை நீங்களே கடுமையாக விமர்சித்துப் பாருங்கள். ரத்தினங்கள் பட்டை தீட்ட தீட்ட மெருகேறி ஒளிர் விடும் அல்லவா?

பலம், பலவீனம், வாய்ப்பு, எதிர்ப்படும் தடைகள் ஆகியவற்றை உங்கள் திட்டம் பற்றி ஆலோசியுங்கள்.

'டைம் பட்ஜெட்' என்ற தேவையற்ற செயல்களை உங்கள் வாழ்க்கை முறையிலிருந்து நீக்குங்கள். முக்கியமானவற்றுக்கு முதலிடம் அளியுங்கள். குறிப்பிட்ட காலக் கெடுவினுள் உங்களின் குறிப்பிட்ட பணி முடிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருங்கள். 'இது தேவையா? இது முக்கியமா?' என்ற கேள்விகளைக் கேட்டால், உங்களது விடைகள் உங்கள் வழியைச் செம்மைப் படுத்தும்.

உங்கள் கருத்துகள் நீங்கள் அல்ல. ஆகவே கருத்துகளை விமர்சிப்பவர்களுடன் சண்டை போடாதீர்கள். அவர்கள் உங்களை விமர்சித்துத் தரம் தாழ்த்தவில்லை. உங்கள் கருத்துகளையே விமர்சிக்கிறார்கள் என்று புரிந்துகொண்டு நட்பு ரீதியில் விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.