இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், பொறியியல், உயிரியல், புவியியல் போன்ற பல துறைகளில் ஒன்றிணைந்து இயங்கும் துறை நேரற்ற இயக்கவியல் (நான்-லீனியர் டைனமிக்ஸ்) என்பதாகும். இயற்கையில் நேரற்ற இயக்கம் என்பது பல்வேறு நிலைகளில் பல இடங்களில் உள்ளது. இவற்றை ஆராயவும் புரிந்துகொள்ளவும் முன்கூட்டியே அறியவும் விளக்கவும் அறிவியலாளர்கள் முயற்சி செய்கின்றனர். இதில் சிறந்து விளங்குபவர் சர்வதேசப் புகழ் பெற்ற தமிழ்நாட்டுப் பேராசிரியர் எம்.லட்சுமணன்.
பொள்ளாச்சி, நெகமம் அருகில் உள்ள குருவே கவுண்டன் பாளையம் என்னும் 250 பேர் வசிக்கும் சிற்றூரில் 1946-இல் பிறந்தவர். பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் படிக்கும் போது இயக்கவியலில் அதிக ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்தே வானியல் மீது ஈர்ப்பும், கணித ஆர்வமும் கொண்டிருந்ததால் இயற்பியல் பிரியராகிவிட்டார்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் முதுநிலை அறிவியல் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டங்களை இயற்பியல் பாடப் பிரிவில் பெற்றுள்ளார். பர்த்வான் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் பட்டம் பெற்றுள்ளார். 43- ஆண்டுகாலப் பேராசிரியர் பணிஅனுபவமும், 50 ஆண்டுகால ஆராய்ச்சி அனுபவமும் பெற்றவர். மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளின் மூலம் பல கோடி ரூபாய் நிதி உதவி பெற்று 25- க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளை சிறப்பாக முடித்திருக்கிறார். பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளார், ஆய்வுக் கட்டுரை ஆற்றியுள்ளார்.
நேரற்ற இயக்கவியலுக்காக ஒரு பிரத்யேகமான மையம் (சி. என். எல். டி) 1990-ஆம் ஆண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் எம்.லட்சுமணனின் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மையமாகும். இதேபோன்று ஒரு மையம் அமெரிக்காவில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் 1985-ஆம் ஆண்டு முதல் இயங்குகிறது.
பேராசிரியர் எம். லட்சுமணனின் ஆராய்ச்சிப் பணிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக நேரற்ற இயக்கவியல் மற்றும் கோட்பாட்டு இயற்பியல் துறைகளில் பல்வேறு அம்சங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இயற்பியலில் அவர் மேற்கொண்ட பன்முனை ஆய்வுகள், காந்த சாலிடான்கள், ஆற்றல் பகிர்வின் கீழ் சாலிடான் அடிப்படையிலான முழு-ஒளியியல் கணினி, குவாண்டம் கொள்கையின் முழுமையான ஒருங்கிணைப்பு, மற்றும் இணைக்கப்பட்ட நேரற்ற இயக்கவியல் அமைப்புகளில் கட்டுப்படுத்துதல், ஒத்திசைத்தல், கூட்டு இயக்கவியல் நிலைகள் குறித்த புதுமையான கருத்துகள், சமன்பாடுகள் புதிய கோட்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளன. இவர் குழுவுடன் உருவாக்கிய நேரற்ற மின்னணு சுற்றுகளும் அவற்றின் வகைகளும் புதுமையான கிளைப்பிரிவுகளைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்தப் படைப்புகளை உள்ளடக்கிய 433-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை இவர் வெளியிட்டுள்ளார். மேலும், புகழ்பெற்ற பதிப்பகங்கள் மூலம் நேரற்ற இயக்கவியல் துறையில் 23 முக்கிய மதிப்புரைகள், 33 மாநாட்டுக் குறிப்புகள், 10 பொதுக் கட்டுரைகள் மற்றும் 10 புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். இந்தப் படைப்புகள் அனைத்தும் உலக அளவில் ஆய்வுக் கட்டுரைகளில் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
அவர் 36 மாணவர்களின் முனைவர் பட்டப் படிப்புகளுக்கு நெறியாளராக இருந்துள்ளார். மேலும் எண்ணற்ற இளம் அறிஞர்களுக்கு அவர்களின் முனைவர் மற்றும் முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய ஆராய்ச்சிகளில் உதவியுள்ளார்.
அண்மையில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட உலகின் முதல் 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில், இந்தியாவின் சார்பில் பாய்மங்கள் மற்றும் பிளாஸ்மா பிரிவின் கீழ் அவரது பெயர் முதலிடம் பிடித்துள்ளது. அவர் இயற்பியல் அறிவியலுக்கான எஸ். எஸ். பட்நாகர் பரிசு (1989), ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார் விக்யான் ஸ்ரீ விருது (2024), பல்கலைக்கழக மானியக்குழுவின் இளம் விஞ்ஞானி விருது, தமிழ்நாடு அரசின் மதிப்புமிக்க டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது (2021), என்எஸ்சி 25 அமைப்பினால், "நேரற்ற இயற்பியலில் வாழ்நாள் சாதனைக்கான லாக்ராஞ்ச் விருது (2025)' உள்ளிட்ட உயரிய அறிவியல் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தேசிய அறிவியல் இருக்கையில் மூத்த புகழ் பெற்ற விஞ்ஞானியாகவும், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பெருந்தகையாகவும் தற்போது பணிபுரிகிறார் என்பது பெருமைக்குரியது.
தற்காலத்தில் அறிவியல் பாடங்களை விட பொறியியல் பாடங்களின் மீது மாணவர்கள் அதிக நாட்டம் கொள்கின்றனரே என்று அவரிடம் கேட்டதற்கு, ""ஒரு கட்டத்துக்கு மேல் ஆழ்ந்த அறிவைப்பெற படிக்கும் போது அறிவியலும் பொறியியலும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பதை அறியமுடியும். இதன் மூலம் ஒன்றைத் தேர்வு செய்பவர் இன்னொன்றோடு அதற்குள்ள தொடர்பை உணர்ந்துகொள்ளலாம். ஆகையால் அறிவியலும் படிக்கலாம், பொறியியலும் படிக்கலாம். ஆனால், எதைப் படிக்கிறார்களோ அதை விரும்பிப் படிக்க வேண்டும்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உயிர் இயற்பியலில் ஒரு தடம்
குழந்தைகள் வடிவமைப்பு

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் ஆராய்ச்சி விருதுகள் வழங்கல்

அரசு பள்ளி மாணவிக்கு மத்திய அரசின் விருது
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

