19 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை மின்வாரியத்தில் ரூ. 2,000 கோடி டெண்டா்கள் நிறுத்திவைப்பு!அமெரிக்காவின் புதிய க்ரீன் காா்டு கொள்கைக்கு ஜனநாயக கட்சியினா் எதிா்ப்பு ஈரான் போா் நெருக்கடி: மகன் திருமண விழாவைத் தவிா்க்கும் டிரம்ப்!போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!
/

திரைக்கதிர்

இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும், ஸ்ரீலீலாவும் காதலித்து வருவதாக அண்மையில் இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன.

News image
Updated On :24 மே 2026, 4:07 am IST

இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும், ஸ்ரீலீலாவும் காதலித்து வருவதாக அண்மையில் இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன.

இது தொடர்பாகப் பேசியிருக்கும் ஸ்ரீலீலாவின் தாயார் ஸ்வர்ணலதா, 'இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. ஸ்ரீலீலா, ஜூன் மாதம் நடைபெறவுள்ள 'நீட்-பிஜி' மருத்துவ மேற்படிப்புத் தேர்வுக்குத் தயாராகி வருகிறார். அவருடைய கவனம் முழுவதும் படிப்பு, திரைப்படங்களின் மீது மட்டும்தான் இருக்கிறது. இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களுக்கு இன்னும் ஐந்து, ஆறு ஆண்டு கால அவகாசம் இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

Story image

'கருப்பு' படக்காட்சியில் 'அலை ஓசை' படத்தில் வரும் 'போராடடா...' பாடலைப் பயன்படுத்தியிருப்பார்கள். அதன் பிறகு அக்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பற்றிய ஒரு வசனமும் இடம் பெற்றிருக்கும்.

அதற்காக படக்குழுவினரை ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளப் பக்கங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் அதற்கு வருத்தம் தெரிவித்து படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

அதில், ' இளையராஜாவின் பெயரைப் பயன்படுத்தி 'கருப்பு' திரைப்படத்தில் வரும் காட்சி என்பது, செய்தியைக் கடத்தும் நோக்கத்துக்காகக் கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு. அதற்காக இசைஞானியின் ரசிகர்களோ, பிறரோ மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Story image

முதல்வர் ச.ஜோசப் விஜய் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் தேவையில்லாத விஷயங்களை உருவாக்குவதற்காக கேள்விகளை எழுப்பியதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார் மாளவிகா மோகனன். அச்செய்தியாளரின் செயலை சமூகவலைதளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர்.

அந்தப் பதிவில் அவர், 'நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன். அதில் ஒரு சிலர் மட்டும் தேவையின்றி கதையைத் திசைதிருப்பும் வகையிலும், ரசனைக்கு அப்பாற்பட்டும் சில கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அது முற்றிலும் தேவையற்ற ஒன்று. தளபதி விஜய்யை கடந்த ஏழு ஆண்டுகளாக எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மீது எனக்கு எப்போதுமே அலாதியான மரியாதை உண்டு. அவரை என்னுடைய நல்லதொரு நண்பர் என்று சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Story image

பிரான்ஸில், 79-ஆவது 'கான் திரைப்பட விழா' அண்மையில் தொடங்கியது. பாலிவுட் நடிகை ஆலியா பட் இரண்டாவது முறையாக இந்தாண்டும் கான் திரைப்பட விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். இவ்விழாவில் ஆலியா பட் அணிந்து சென்றிருந்த பிங்க் நிற ஆடை இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அந்த உடை மட்டுமல்ல, ஆலியா பட் கான் திரைப்பட விழாவில் ரெட் கார்பெட்டில் நடந்து செல்லும் காணொலி ஒன்றும் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அதில் ஆலியா பட், ரெட் கார்பெட்டில் நடந்து வந்துகொண்டிருக்கிறார். அப்போது அவர் புகைப்படக் கலைஞர்களுக்காக போஸ் கொடுத்திருக்கிறார். ஆனால், அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் ஆலியா பட்டை

கவனிக்காமல், வேறு நபர்களைப் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருந்திருக்கிறார்கள். இப்படியான ஒரு விஷயம் நிகழ்ந்தவுடன் அங்கிருந்த மொபைல் போன் புகைப்படக்கலைஞர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டுக் கிளம்பியிருக்கிறார் ஆலியா பட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.