தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்? துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை
/

ஆலியா பட்டின் ஆல்ஃபா பட முதல் நாள் வசூல்!

பாலிவுட் நடிகை ஆலியா பட் நாயகியாக நடித்து வெளியான ஆல்ஃபா திரைப்படத்தின் முதல் நாள் வசூல்...

News image

ஆல்ஃபா பட போஸ்டர்...

Updated On :4 ஜூலை 2026, 5:32 pm IST

பாலிவுட் நடிகை ஆலியா பட் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான “ஆல்ஃபா” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான ஆலியா பட் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான புதிய படம் “ஆல்ஃபா”. ஸ்பை ஆக்‌ஷன் கதைகளத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் ஷிவ் ரவைல் இயக்கியுள்ளார்.

இத்துடன், யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ஷார்வரி, அனில் கபூர், பாபி டியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான “ஆல்ஃபா” திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ. 17.42 கோடி வசூலித்துள்ளதாக இன்று (ஜூலை 4) படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ஹிந்தி மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The first-day box office collection of the film "Alpha," starring Bollywood actress Alia Bhatt in the lead role, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.