மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!எச்.டி.எப்.சி. வங்கியின் ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாக சரிவு!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

சண்டைக் காட்சிகளில் அசத்திய ஆலியா பட்..! பாபி தியோல் புகழாரம்!

நடிகை ஆலியா பட் குறித்து நடிகர் பாபி தியோல் கூறியிருப்பதாவது...

News image

ஆலியா பட், பாபி தியோல். - படங்கள்: இன்ஸ்டா / ஆலியா பட், பாபி தியோல்.

Updated On :27 மே 2026, 7:39 pm IST

பாலிவுட் நடிகர் பாபு தியோல் நடிகை ஆலியா பட் குறித்து மிகவும் பெருமையாகப் பேசியுள்ளார். ஆல்பா படத்தில் ஆலியா பட் சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட் 2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமாகி கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார்.

தற்போது ஆல்ஃபா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை ஷர்வாரியும் உடன் நடிக்கிறார். ஷிவ் ராவாலி இயக்கும் இந்தப் படத்தை ஒய்.ஆர்.எஃப். ஸ்பை யுனிவர்ஸில் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது.

ஆலியா பட்டின் கணவர் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தில் பாபி தியோல் நடித்து மீண்டும் புகழ்பெற்றார். தற்போது, ஆலியா பட் உடன் ஆல்பா படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து அவர் கூறியிருப்பதாவது:

இரண்டு பெண்கள் சண்டையிடும் ஆல்பா மாதிரியான படத்தை இந்தியாவில் உருவாக்குகிறோம் என்பது அற்புதமாக இருக்கிறது. இந்தப் படம் மிகவும் புதியதாக, புத்துணர்ச்சியாக, பார்வையாளஎகளுக்கு புதிய விருந்தாக அமையும் என்பதால் எனக்கு இந்தப் படம் பிடித்திருக்கிறது.

நான் நடித்ததிலேயே ஆலியா பட் மிகவும் கடினமான உழைப்பாளி. முழுமையான தயாரிப்புடன் ஒவ்வொரு காட்சியிலும் ஈடுபாட்டுடன் நடிப்பார். இதுமாதிரியான சண்டைக் காட்சிகளில் நடிக்காத ஆலியா எப்படி இதற்கு தயாரானார் என்பது ஆச்சரியமளிக்கிறது.

சண்டைக் காட்சிகள் மிகவும் கடினமானது. ஆலியா பட் தன்னுடைய அனைத்தையும் இதில் வழங்கியுள்ளார். இவருடன் வேலைப் பார்க்க வேண்டுமென பல நாள்கள் எதிர்பார்த்திருக்கிறேன். அவருடனான படப்பிடிப்பு நேரங்கள் சிறந்ததாக இருந்தது என்றார்.

இந்தப் படம் வரும் ஜூலை 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கடைசியாக வெளியான ஆலியா பட்டின் ஜிக்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Summary

Bobby Deol on working with Alia Bhatt in Alpha: She comes to the set deeply invested in every scene

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.