தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய வெற்றிமாறனின் உதவி இயக்குநர்!

இயக்குநர் ரவிஅரசு தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்து...

Vetrimaaran, RaviArasu

வெற்றிமாறன், ரவிஅரசு - ENS

Published On :27 மே 2026, 6:39 pm IST

ஈட்டி திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரவிஅரசு தனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதற்கு ’ஃபைவ் சி ஃபிலிம்ஸ்’ - FIVE C’s Films எனப் பெயரிட்டுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநராக மாறியவர்தான் ரவிஅரசு. இவர் இயக்கத்தில் ஈட்டி, ஐங்காரன் என்ற திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இயக்குநர் ரவிஅரசு தனது தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்துள்ளார். ’ஃபைவ் சி ஃபிலிம்ஸ்’ எனப் பெயரிட்டுள்ள இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

இயக்குநர் வெற்றிமாறனிடம் 2004ல் உதவி இயக்குநராக அறிமுகமானேன். அங்கு பத்தாண்டுகள் பயணித்தேன். அவருடனான பயணத்தில் கதைசொல்லியாவதில் மிகவும் உணர்ச்சிமிக்க படைப்பாளனாக மாற்றியது.

இதுவரை நான் ஈட்டி, ஐங்காரன் என்ற படங்களை இயக்கியுள்ளேன். தமிழ் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகளைக் கடந்துள்ள நான் 2026ல் எனது பயணத்தில் புதிய மாற்றத்துக்கு முன்னேறியுள்ளேன். ’ஃபைவ் சி ஃபிலிம்ஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன்.

இந்த நிறுவனத்தில் எனது இயக்கத்திலான படங்களும் இளம் படைப்பாளர்களின் படங்களும் தயாரிக்கப்படும். மிகவும் என்டர்டெயின்மென்ட், கவனத்தை ஈர்க்கும் வகையிலான படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இந்த நேரத்தில், இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த எனது ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகத்தினர் அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிய பயணத்திலும் இதேமாதிரியான ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன்.

முதல் படத்தின் குறித்து விரைவில் அறிவிப்பேன். நன்றி எனக் கூறியுள்ளார். சமீபத்தில் பேட் கேர்ள் படத்துடன் தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Summary

Director Raviarasu launches his production house FIVE C’s Films, supporting young filmmakers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.