மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கருப்புக்கு வரவேற்பு... உற்சாக மிகுதியில் கத்திய ஆர்ஜே பாலாஜி!

கருப்புக்கு வரவேற்பு...

News image

ஆர்ஜே பாலாஜி

Updated On :15 மே 2026, 2:56 pm IST

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி கருப்புக்கு கிடைத்த வரவேற்பைக் கொண்டாடியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பல மாதக் காத்திருப்புக்குப் பின் வெளியானதால் சூர்யா ரசிகர்கள் பலரும் முதல்நாள் முதல்காட்சியைப் பார்க்க முன்பதிவு செய்திருந்தனர்.

படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதால் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, த்ரிஷா, சாய் அபயங்கர் உள்ளிட்டோர் திரையரங்கில் படம் பார்த்தனர். கிளைமேக்ஸ் முடிந்ததும் படத்திற்கு ரசிகர்களிடமிருந்து கைதட்டல், விசில் சத்தம் வந்ததும் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி உற்சாக மிகுதியில் கத்தி ஆர்பரித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. கருப்பு நேற்று (மே. 14) வெளியாகாததால் ஆர்ஜே பாலாஜி கண் கலங்கிய விடியோவை வெளியிட்டிருந்தார். தற்போது, உற்சாகத்தில் இருப்பது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Director RJ Balaji has celebrated the reception received by Karuppu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.