தமிழக அமைச்சரவையில் இரண்டு பிராமணர்கள் இடம்பெற்றுள்ளது குறித்து எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ள திருச்செல்வம் பேசியதாவது:
''சமீபத்தில் பதவியேற்ற தமிழக அமைச்சரவையில் 2 பிராமணர்கள். அறநிலையத் துறையை பிராமணர்கள் கையில் எப்படி ஒப்படைக்கலாம் என தமிழ்நாட்டில் மாறுபட்ட சிந்தனை உடையவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒருகாலத்தில் கல்வி மறுக்கப்பட்டபோது இடஒதுக்கீடு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. இப்போது பாகுபாடு குறைந்து சமநிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். இதில் 2 அமைச்சர்கள் பிராமணர்கள். இதை சந்தேகத்துடன் வகைப்படுத்துவது அரசை குறைத்து மதிப்பிடுவதாகும்.
சமுக நீதிகாத்த வீராங்கனை என்று ஜெயலலிதாவை நாம்தான் கூறினோம். ஜெயலலிதா பிராமணர்தானே. ஜெயலலிதாவை நம்பிய நாம் இவர்களையும் நம்பலாமே. இதில் என்ன தவறு. நல்லது நினைப்போம். நல்லதே நடக்கும்'' என திருச்செல்வம் பேசியுள்ளார்.
தவெக அமைச்சரவையில் இந்து அறநிலையத் துறை அமைச்சராக ரமேஷ், உணவுத் துறை அமைச்சராக வெங்கட்ரமணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆட்சியில் பிராமணர்களுக்கு இடம் கொடுக்கப்படவில்லை; ஆனால், இந்த ஆட்சியில் பிராமணர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வந்த நிலையில், திருச்செல்வம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
Summary
Two Brahmins in the Cabinet: Ethirneechal Director Thiruchelvam Comments goes viral
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்புக்கு வரவேற்பு... உற்சாக மிகுதியில் கத்திய ஆர்ஜே பாலாஜி!
விஜய்யின் ஆட்சியால் சினிமாவில் சுதந்திரம் கிடைக்கும்: பேரரசு நம்பிக்கை

இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்... முதல்வர் விஜய்க்கு இயக்குநர் ஷங்கர் வாழ்த்து!








