சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஆலியா பட் பிடிக்கும்; ஆனால்... சாரா அர்ஜுன் 9 வயதில் பேசிய விடியோ வைரல்!

இணையத்தில் வைரலாகும் நடிகை சாரா அர்ஜுனின் விடியோ குறித்து...

Sara Arjun at age 9, Alia Bhatt at age 20 (center)

9 வயதில், 20 வயதில் சாரா அர்ஜுன், ஆலியா பட் (நடுவில்) - படங்கள்: இன்ஸ்டா / ஆலியா பட், சாரா அர்ஜுன், எக்ஸ்/ அதிதி.

Published On :

நடிகை சாரா அர்ஜுன் தனது 9 வயதில் பேசிய விடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் துரந்தர் திரைப்படத்தின் வெற்றியின் மூலமாக இந்திய ரசிகர்களின் கவனம் பெற்றார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய சாரா அர்ஜுன் தெய்வ திருமகள் மற்றும் சைவம் படங்களில் நடித்து புகழ்பெற்றார். தற்போது, துரந்தர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி இந்தியளவில் கவனிக்கப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த சாரா அர்ஜுன் (20 வயது) தனது 6 வயதிலேயே திரைப்படத்தில் நடித்து அசத்தினார். அவர் தற்போது துரந்தர் வெற்றியினால் மிகவும் கவனிக்கப்பட்டும் நாயகியாக மாறியுள்ளார்.

சாரா அர்ஜுன் தனது 9 வயதிலேயே மிகவும் பக்குவமாகப் பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில் உங்களது ரோல் மாடல் யார் என்ற கேள்விக்கு சாரா அர்ஜுன் பேசியிருப்பதாவது:

ஆலியா பட்டின் தோற்றமும் நடிக்கும் விதமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆலியா, தீபிகா படுகோன் இருவரும் பிடிக்கும். அவர்கள் எனக்கு உத்வேகம் அளித்துள்ளார்கள். ஆனால், உண்மையில் நான் சாரா அர்ஜுனாகவே இருக்க விரும்புகிறேன். நான் யாரைப் போலவும் ஆக விரும்பவில்லை எனக் கூறியிருந்தார்.

சாரா அர்ஜுன் துரந்தர் படத்தினைக் குறித்து மிக நீண்ட பதிவினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில் மறக்கப்பட்ட அனைத்து நிஜமான நாயகர்களுக்கும் நன்றி என உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் படத்துக்குப் பிறகுதான் அவர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது. இணையத்தில் சாரா அர்ஜுன் ரசிகர்கள், “9 வயதிலேயே எவ்வளவு தெளிவு, பக்குவம்” என வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.

Summary

Dhurandhar Star Sara Arjun's 9-Year-Old Video Calling Deepika Padukone, Alia Bhatt Her 'Inspiration' Goes Viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.