/

ஓடிடியில் வெளியாகும் துரந்தர் வில்லனின் புதிய படம்!

நடிகர் அக்‌ஷய் கண்ணா நடித்துள்ள “இக்கா” படத்தின் வெளியீடு குறித்து...

News image

இக்கா திரைப்படத்தில் நடிகர் அக்‌ஷய் கண்ணா... - Instagram

Updated On :13 ஜூன் 2026, 3:52 pm IST

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் கண்ணாவின் நடிப்பில் உருவான "இக்கா” திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மாபெரும் வெற்றி பெற்ற துரந்தர் படத்தின் மூலம் மொழிகளைக் கடந்து அறியப்படுபவர் நடிகர் அக்‌ஷய் கண்ணா. இப்படத்தில், வில்லனாக நடித்த அக்‌ஷய் கண்ணாவின் நடிப்பு பலரையும் ஈர்த்ததுடன், பெருமளவில் பாராட்டுகளையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் சித்தார்த் பி மல்ஹோத்ரா இயக்கத்தில் நடிகர்கள் சன்னி டியோல் மற்றும் அக்‌ஷய் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள புதிய படம் “இக்கா”.

நீதிமன்றத்தில் நடைபெறும் கொலை வழக்கு விசாரணையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் திலோத்தமா ஷோம், டியா மிர்சா, ஷிர்ஷிர் சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியுள்ள “இக்கா” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் இன்று (ஜூன் 13) அறிவித்துள்ளனர்.

Summary

"Ikka," starring Bollywood actor Akshaye Khanna, will be released on OTT.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.