தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

திரைக்கதிர்

இசையமைப்பாளர் அனிருத் திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்திருக்கின்றன.

Updated On :

இசையமைப்பாளர் அனிருத் திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. தொடக்கத்தில் 'ஒய் திஸ் கொலவெறிடி' பாடல் வெளியாகி, பயங்கர 'ஹிட்' அடித்தது. அதன்பின், பல ஹிட் பாடல்கள், உச்ச நட்சத்திரங்களின் படங்கள் என மைல்கற்களை அவர் தொட்டுவிட்டார். இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில், '15 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான் எங்களின் முதல் பாடல் இந்த உலகுக்குள் அடியெடுத்து வைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை இது ஒரு தொடர்ச்சியான, தடையற்ற பயணமாக இருந்து வருகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் தயாரிப்பாளர் சங்கத்தினர், முன்னாள் தலைவர்கள் எனப் பலரும் இணைந்து ஆலோசனை நடத்தினர். இதன் பிறகு 'சண்டியர்' திரைப்படத் தலைப்பு தொடர்பாகப் பேசிய தலைவர் தமிழ்க்குமரன், 'தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு தலைப்பைப் பதிவு செய்தால், அது 10 ஆண்டுகளுக்குச் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் வசம் இருக்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தயாரிப்பாளரின் அனுமதியோடு வேறு யார் வேண்டுமானாலும் அந்தத் தலைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே 13 ஆண்டுகளுக்கு முன்பே 'சண்டியர்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகிவிட்டது. ஆனால், முன்பே அந்தப் பெயரில் படம் வெளியானபோது எந்த எதிர்ப்பும் எழவில்லை'' என்றார்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓம்' திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

இந்தப் படத்தில் சாய் பல்லவியுடன் பணியாற்றியது குறித்து தனுஷ் கூறுகையில், 'படத்தின் இரண்டாவது ஹீரோ சாய் பல்லவி. மம்மூட்டி சாரைப் போலவே அவரும் தனது கம்ஃபோர்ட் ஜோனிலிருந்து வெளியே வந்து, ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இயற்கையின் குழந்தை. புட்டபர்த்தி சாய்பாபாவே தன் கையில் தூக்கிப் பெயர் வைத்த குழந்தை அவர். அதனால்தான் அவர் சாய் பல்லவி. அந்த ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும்'' எனப் பேசினார்.

உலகளாவிய இசை அடையாளமான ஏ.ஆர். ரஹ்மான் தனது 'வொண்டர்மென்ட் டூர்' இசை நிகழ்ச்சியை 2027-ஆம் ஆண்டு ஜூன் 12-இல் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற டிஎம் ஸ்டேடியம் நேஷனலில் நடத்தவுள்ளார். அவர் மாலிக் ஸ்ட்ரீம்ஸின் டத்தோ மாலிக்குடன் முதன்முறையாக இணைந்து நடத்தும் பிரம்மாண்டமான அரங்க இசை நிகழ்ச்சியில், 90 சதவீதம் தமிழ்ப் பாடல்களும், 10 சதவீதம் ஹிந்திப் பாடல்களும் இடம்பெறவுள்ளன. இசை, மெட்டுகள், உணர்வுகளின் அசாதாரண கொண்டாட்டத்துக்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் இந்த நிகழ்ச்சி மறக்க முடியாத இசை அனுபவத்தை வழங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.