அசத்தப்போகும் 'அசரீரி'
'96', 'மெய்யழகன்' உள்ளிட்ட படங்களைக் கொடுத்துக் கவனிக்க வைத்த இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பிரேம் குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
'96', 'மெய்யழகன்' உள்ளிட்ட படங்களைக் கொடுத்துக் கவனிக்க வைத்த இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பிரேம் குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் நடிக்கும் இந்தப் புதிய திரைப்படத்துக்கு 'அசரீரி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கோவிந்தராஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.
'அசரீரி' திரைப்படம் 2027 ஜனவரி 1-இல் புத்தாண்டு வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. உணர்வுபூர்வமான படங்களை எடுத்த பிரேம்குமார் தற்போது ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்திருக்கும் 'அசரீரி' திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

