மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மாற்றியமைப்பு! திருச்சி சிவா, கனிமொழிக்கு மீண்டும் தலைமைப் பொறுப்பு!தேஜஸ் போா் விமானத் திட்ட தாமதத்தால் பாதிப்பு: விமானப் படை தலைமைத் தளபதிபிரேஸிலில் இன்று அதிபா் தோ்தல்ஹசீனா நாடு கடத்தல்: காலக்கெடு இல்லை - இந்தியா

திரைக் கதிர்

தனுஷின் 56-ஆவது படம் 'லப்பர் பந்து'. தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார்.

Published On :

தனுஷின் 56-ஆவது படம் 'லப்பர் பந்து'. தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். மதுரையில் நடைபெற படப்பூஜை தள்ளிப் போயிருக்கிறது. இதற்கிடையே ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'ஓம்' படத்தின் ரிலீஸிலும் மாற்றம் வரவிருக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அக்டோபர் 16-இல் வெளியாகும் என்ற அறிவிப்பில் இப்போது மாற்றம் வரவிருக்கிறது என்கிறார்கள். ரஜினியின் 'ஜெயிலர் 2' அக்டோபர் 15-இல் வெளியாவதால் 'ஓம்' ரிலீஸ் தள்ளிப்போகிறது என்றும், நவம்பரில் திரைக்குக் கொண்டு வரலாம் என்றும் தெரிகிறது.

ராப் பாடகராக அறிமுகமாகி இசையமைப்பாளராக வலம் வந்தவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் இசையமைத்து, இயக்கி, நடித்துள்ள படம் 'மீசைய முறுக்கு 2'. கானா பாடல்களையும், கானா கலைஞர்களின் வாழ்க்கையையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இசையமைப்பாளர் தேவா ஹிப்ஹாப் ஆதியை அழைத்து, பாராட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தை தன் வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஆதி 'இந்தப் பயணத்துக்கு... இது போதுமே...' எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தின் அடையாளங்களில் ஒன்று நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம். அவ்வப்போது ரசிகர்கள் சந்திப்பு, ஓய்வெடுப்பு, ரசிகர் மன்றச் செயல்பாடுகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளுக்கு ரஜினிகாந்த் இந்த மண்டபத்தைப் பயன்படுத்தி வந்தார்.

1990- களில் ரஜினிகாந்த் கட்டிய இந்தத் திருமண மண்டபம் விரைவில் நட்சத்திர ஹோட்டலாக மாறவிருக்கிறது. மண்டபம் திறக்கப்பட்டது முதலே ஒருபுறம் திருமணங்கள் நடைபெற்று வந்தாலும், முக்கிய முடிவுகளை எடுக்கிறபோது இங்கு வந்து விடுவார் ரஜினி. இத்தகைய பெருமைகளைக் கொண்ட மண்டபம்தான் தற்போது இடிக்கப்பட்டு நட்சத்திர ஹோட்டலாக மாறப் போகிறது.

'டோரதி' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக் சுப்புராஜிடம், '10 வருடங்களுக்குப் பிறகு நாங்கள்தான் நார்மல். நீங்கள்தான் ஜந்துக்களாகப் பார்க்கப்படுவீர்கள் என்ற வசனம் சர்ச்சைக்குள்ளானதே' என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், 'அவர்களை தவறாகப் பார்க்கும் நபர்களிடம் சொல்லக் கூடிய வசனம் தான் அது.

இந்தப் படம் 1990-களில் நடக்கக்கூடிய கதைக்களம். அந்த வசனத்தின் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் எங்களை மனிதர்களாக மதிக்காமல் இருக்கிறீர்கள். ஆனால் இன்னும் 10 வருடத்தில் எங்களையும் மரியாதையோடு பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அந்தச் சமயத்தில் எங்களைத் தவறாகப் பார்த்தவர்களை ஜந்துவாகப் பார்ப்பார்கள் என்பது தான் அந்த வசனத்தின் அர்த்தம். அதைத்தான் படத்தில் சொல்ல வந்தோம் என்பது படம் பார்த்தவர்களுக்குப் புரியும்' எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.