இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

தென்னிந்திய கூட்டமைப்பு

தொலைக்காட்சி, டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் முக்கியமான முன்னெடுப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் துறைகளைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து..

Published On :

தொலைக்காட்சி, டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் முக்கியமான முன்னெடுப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் துறைகளைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து 'தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓ.டி.டி. தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

தென்னிந்திய மொழிகளின் தொலைக்காட்சி, டிஜிட்டல் துறைகளில் செயல்பட்டு வந்த அமைப்புகள் தற்போது ஒரே குடையின் கீழ் இணைந்துள்ளதால், தயாரிப்பாளர்களின் நலன்களுக்கான ஒற்றுமை மிக்க, வலிமை வாய்ந்த அமைப்பு உருவாகியுள்ளது. நீண்ட

காலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வு காண்பது, கலைஞர்களின் கால்ஷீட், பணிநேரங்களை முறைப்படுத்துதல், தயாரிப்பாளர்களின் முதலீடுகளைப் பாதுகாத்தல், தென்னிந்திய தொலைக்காட்சி, டிஜிட்டல் துறைகளுக்கு இடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவை இந்தச் சங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இதனால் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே ஒரு வலுவான பாலமாக இந்த அமைப்பு செயல்பட்டு, மாநில எல்லைகளைக் கடந்து நடைபெறும் தயாரிப்புப் பணிகள் சீரான முறையிலும், வெளிப்படைத்தன்மையுடனும், ஒழுங்குமுறையுடனும் நடைபெறுவதற்குத் தேவையான ஆதரவை வழங்கும்.

அமைப்பின் நிர்வாகக் குழுத் தலைவராக தெலுங்கு தொலைக்காட்சி துறையைச் சேர்ந்த பிரசாத் செயல்படுவார். தமிழக அமைப்பின் கௌரவத் தலைவர் ராதிகா சரத்குமார் புதிய கூட்டமைப்பைத் தொடங்கி வைத்தார். சத்யஜோதி டி.ஜி. தியாகராஜன் மற்றொரு கௌரவத் தலைவராவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.