மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மாற்றியமைப்பு! திருச்சி சிவா, கனிமொழிக்கு மீண்டும் தலைமைப் பொறுப்பு!தேஜஸ் போா் விமானத் திட்ட தாமதத்தால் பாதிப்பு: விமானப் படை தலைமைத் தளபதிபிரேஸிலில் இன்று அதிபா் தோ்தல்ஹசீனா நாடு கடத்தல்: காலக்கெடு இல்லை - இந்தியா

உலகம் பலவிதம்

பஞ்சாப் மாநிலம், பக்வாரா நகரில் உள்ள 'லவ்லி புரபெஷனல் யூனிவர்சிட்டி'யில் மாணவர்கள் அண்மையில் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.

Published On :

புத்தகம் திருடு போகாது

பஞ்சாப் மாநிலம், பக்வாரா நகரில் உள்ள 'லவ்லி புரபெஷனல் யூனிவர்சிட்டி'யில் மாணவர்கள் அண்மையில் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. பல்கலைக்கழக வணிக வளாகத்தில் ஒரு கூட்டம் புகுந்து கடைகளை அடித்து நொறுக்கியது. விலை உயர்ந்த பிஎஸ்5, ஸ்மார்ட் போன், லேப் டாப், டி-ஷர்ட் உள்பட பல பொருள்களை இந்தக் கூட்டம் அள்ளிச் சென்றது. மாணவர்களில் பலர் பொருள்களை எடுத்துச் செல்லும் விடியோக்கள் வைரலாகின.

'இந்தத் திருட்டை நாங்கள் செய்யவில்லை' என்று மாணவர் அமைப்பு மறுத்துள்ளது. இது ஒருபுறமிருக்க, அதிசயமாக இந்த வளாகத்தில் திருடு போகாத ஒரே பொருள் புத்தகங்கள். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ஒரு புத்தகம்கூட களவாடப்படவில்லை.

Story image

வெள்ளத்தில் 'ஜாய்ரைட்'

தாய்லாந்து தலைநகரம் பாங்காக்கில் சில இடங்கள் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளன. மழை பெய்தால் வெள்ளம் தேங்கும். இதை கேலி செய்யும்விதமாக, ஒரு அலைசறுக்கு வீரர் , சாலையில் தேங்கிய வெள்ளத்தில் சறுக்கிப் பறந்து விளையாடினார்.

இதை அவரது நண்பர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். சமூக ஊடங்களில் இந்த விடியோ வைரலானது. இதையடுத்து அலைசறுக்கு வீரர் மற்றும் விடியோ எடுத்த அவரது நண்பர் என இரண்டு பேரையும் தாய்லாந்து போலீஸார் கைது செய்துள்ளனர். பொதுஅமைதிக்கு ஊறு செய்ததாக வழக்கு பதிவாகியுள்ளது.

Story image

துப்புரவுப் பணியில் எந்திரன்

மனிதனை பாதாளச் சாக்கடை மற்றும் கழிவறைத் தொட்டிகளைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் எச்சரித்தும், இந்த அவலம் தொடர்கிறது. பலர் உயிரிழந்து வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தில்லியை அடுத்த குருகிராம் நகராட்சியில் துப்புரவுப் பணியில் எந்திரன்களை ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்த எந்திரன்கள் சாலையில் உள்ள குப்பைகளை தனது உறிஞ்சு குழல் மூலம் இழுத்து துôய்மை செய்கின்றன. பாதாளச் சாக்கடையிலும் இதைப் பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது. இது எந்த அளவுக்கு பயனுள்ளதாக அமையும் என்று விவாதங்கள் தொடங்கியுள்ளன.

Story image

டெலிவரி ரோபோ பிரச்னை

ரஷியாவில் பொருள்களை டெலிவரி செய்வதற்கு எந்திரன்கள்(ரோபோ) பயன்படுத்துகின்றனர். ரஷிய கம்பெனி யான்டெக்ஸ் இத்தகைய டெலிவரி ரோபோக்களைத் தயாரித்து சந்தையில் இறக்கியுள்ளது. இந்த ரோபோக்கள் பெருகிவிட்டன. ஒரே நேரத்தில் சாலையில் கூட்டமாக வந்து விடுகின்றன.

சாலையைக் கடப்பதற்கு சிக்னல் விழுந்ததும் இவை அனைத்தும் கூட்டமாக சாலையைக் கடக்கின்றன. இந்த எந்திரன்கள் ஒரு சூட்கேஸ் அளவுதான் இருக்கின்றன. இவை ஆட்டுமந்தை போல சாலையைக் கடப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்ற புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.

ஆமையின் மீது ஆட்டம்

ஆமையின் ஓடு மிகவும் கடினமானது. பல டன் எடை கொண்ட யானை மிதித்தாலும் ஆமை ஓடு உடையாது. அதற்காக ஆமை ஓட்டின் மீது ஏறி உட்கார்ந்து ஆடலாமா?

ஓமன் நாட்டுக்கு சுற்றுலா வந்திருக்கும் உக்ரேனின் தம்பதி , ராஸ் அல் ஹத் நகர கடற்கரை வந்தனர். அங்கு பெரிய கடல்

ஆமைகள் உலாத்திக்கொண்டிருந்தன. இவர்கள் இருவரும் ஆளுக்கு ஓர் ஆமையை தேர்வு செய்து அதன் ஓட்டின் மீது உட்கார்ந்து, போட்டோ எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டனர்.

இவர்களது கலாட்டாவால் ஆமை தன் உடலை சுருக்கிக்கொண்டது. கை, கால் தலையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டது.

இவர்களது மகிழ்ச்சி கொஞ்ச நேரம்தான் நீடித்தது. ஆமைகளைக் கொடுமை செய்ததாக இவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்துவிட்டனர் ஓமன் அதிகாரிகள்.

122 சொற்கள்

வாஸ்கோடகாமா 1498-ஆம் ஆண்டு, கேரளத்தில் கோழிக்கோடு அருகே கப்பலில் வந்து இறங்கினார். அன்றைய துறைமுக நகரமாக விளங்கிய இப்பகுதியில் பல நாடுகளின் வணிகர்கள் குவிந்திருந்தனர். மிளகு, வாசனைப் பொருள்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது.

வாஸ்கோட காமா ஐரோப்பா திரும்பியபோது, தன்னுடன் ஏராளமான வாசனைப் பொருள்களை எடுத்துச் சென்றார். அவர் கொண்டு சென்ற பொருள்களுடன் ஒரு பட்டியலும் இருந்தது. 122 போர்ச்கீசிய மொழி சொற்களுக்கு இணையான மலையாளச் சொற்கள் அதில் இருந்தன. வணிகர்கள் பேசுவதற்காகவும் பொருள்களை அறிந்துகொள்ளவும் உதவும் வகையில் இந்த வார்த்தைகள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்தப் பட்டியலை 'கோழிக்கோடு மொழி' (மலையாளம்) என்று குறிப்பிட்டு, தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.

ஆர்.எஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.