உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

உலகம் பலவிதம் - 11-10-2026

சாலையில் நடந்து செல்லும்போது உங்கள் தலையை காகம் தட்டிவிட்டுச் சென்றால், அதற்கு ஒரு பலன் சொல்கிறார்கள்.

Published On :

காக்கைகள் மறப்பதில்லை

சாலையில் நடந்து செல்லும்போது உங்கள் தலையை காகம் தட்டிவிட்டுச் சென்றால், அதற்கு ஒரு பலன் சொல்கிறார்கள். இப்போது இன்னொரு கேள்விக்கு அறிவியல் ஆராய்ச்சி இடம் கொடுத்திருக்கிறது. அதாவது, 'நீ ஏதோ அந்த காக்காவுக்குத் தீமை செய்து இருக்கிறாய். அதனால்தான் அது நினைவு வைத்துக் கொண்டு உன்னை தாக்குகிறது' என்று சொல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆம். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பேராசிரியர் ஜான் மார்ஸலப் மற்றும் அவரது மாணவர்கள் நடத்திய ஆராய்ச்சியில், காகங்களுக்கு மனித முகங்களை நினைவு வைத்துக் கொள்ளும் ஆற்றல் இருக்கிறது என்றும், சில காகங்கள் 7ஆண்டுகள் வரை ஒரு முகத்தை நினைவில் நிறுத்தும் ஆற்றல் கொண்டவை என்றும் தெரியவந்துள்ளது.

கோரமான முகமூடிகள் அணிந்து, காக்கைக்கு இம்சை கொடுத்து ஆய்வுகள் நடத்தினர். துன்புறுத்திய முகங்களைக் கண்டதும், காக்கையின் மூளையின் சில பகுதிகளில் மாற்றம் ஏற்படுவதை ஆய்வுகள் மூலம் அறிந்தனர். அந்த முகங்களை காகங்கள் விரட்டின. தங்களுக்கு இடையூறு செய்த முகங்களை காகங்கள் மறப்பதில்லை.

Story image

இது கார் இல்ல...

ராஜஸ்தான் மாநிலம், ஆள்வார் நகரில் ஓர் அரசு ஊழியர் கார் வாங்கினார். பிரபல நிறுவனத்தின் தயாரிப்பு. ஆனாலும் வாங்கிய நாள் முதலாக அந்த காரில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு. 'சரி செய்து கொடுங்கள்' என்று கேட்டார். ஆனால் அவர்கள் இழுத்தடித்தார்கள்.

ஒரு நாள் தனது மனைவி குழந்தைகளுடன் அந்த காரை இழுத்துவந்து ஷோ ரூம் முன்பாக நிறுத்தி, காரின் மீது '12 லட்ச ரூபாய் கழுதை' என்று பேனர் எழுதி வைத்து போராட்டத்தைத் தொடங்கினார். விவகாரம் தலைமை அலுவலகம் வரை சென்றது.

கம்பெனியின் பெயருக்குப் பொதுவெளியில் மோசமான விளம்பரமாக அமைந்துவிட்டதால், 'அந்த காரை எடுத்துக்கொண்டு, பணத்தை அவருக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்' என்று கூறினார்கள். போராட்டம் முடிவுக்கு வந்தது.

Story image

வாசுகி நிஜம்

பாற்கடலில் அமுதம் கடைந்தபோது வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மேருமலையை மத்தாகவும் பயன்படுத்தியதாக புராணங்கள் சொல்கின்றன. நாகங்களின் அரசன் வாசுகி என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் மிக நீளமான பாம்புகள் இருந்துள்ளன என்று இப்போது குஜராத்தில் கிடைத்த கற்படிமங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு 50 அடி நீளமுள்ள பாம்பு இந்தியாவில் இருந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் வாசுகி இன்டிகஸ் என்ற இந்தப் பாம்பின் சில எலும்புகள் ஒட்டிய நிலையில் கிடைத்துள்ளன.

இதை வைத்து அந்தப் பாம்பின் நீளம் 50 அடி என்று நிர்ணயித்துள்ளனர். இந்த வகைப் பாம்புகள் 10 கோடி ஆண்டுகளாக இந்தப் பூமியில் வாழ்ந்து வந்துள்ளன என்றும், இந்தியாவில் இருந்து ஆப்ரிக்கா, ஐரோப்பா வரை பரவின என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.