ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

சின்னதிரை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அவரே தற்போது விளக்கம் அளித்து, முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Updated On :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அவரே தற்போது விளக்கம் அளித்து, முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக தொலைக்காட்சியில் வெளியாகி வரும் தமிழ் 'பிக் பாஸ்' பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதுமை புகுத்தப்படும் நிலையில், இந்தாண்டு 'டெமாக்ரசி ரூம்' என்றும், 'லீடர்' என்றும் புது அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

இந்த சீசனின் முதல் லீடராகத் தேர்வான ஷாதிகா சரியாகச் செயல்படாத நிலையில், வார இறுதியில் தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி கடுமையாகப் பாடம் எடுத்தார்.

'தலைவர் என்றால் என்னன்னே தெரியாமல்... தலைமைத்துவம் என்றால் என்னன்னு புரியாமல்... வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்னைகள் வரும்போது எதிரணி மீது பழி போட்டுவிட்டு, தெறித்து ஓடுவது ஒரு தலைவருக்கான பண்பு இல்லை... அது ஏமாற்று வேலை!'' எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் புரோமோ நிகழ்ச்சியில் அவர் முன்னிலையிலேயே பேசிய இயக்குநர் அட்லி, 'தவெக ஆட்சிக்குப் பிறகே சட்டப்பேரவை நிகழ்ச்சியை தான் உள்ளிட்ட அனைவரும் பார்ப்பதாகவும், ரசிகர்கள் சிறு சிறு பொறிகளில் சிக்கிவிடக் கூடாது'' என்றும், முதல்வர் விஜய்க்கு ஆதரவாகப் பேசினார்.

விஜய் டி.வி.யின் ஆஸ்தான டி.ஜே. பிளாக் எனப்படும் சுதன் குமார் திருமணம் செய்திருக்கிறார். அவருக்கு சின்ன திரைப் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இதுவரை சிங்கிளாகப் பயணித்த டி.ஜே. பிளாக், ரம்யா என்கிற பெண்ணைக் கரம்பிடித்து, குடும்ப வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்.

சில நாள்கள் முன்பே, 'என்றென்றும் பற்றிக்கொள்ள... எனக்கு மிகவும் பிடித்தமான மனிதருடன் எனது வாழ்வின் மிகச்சிறந்த புதிய பயணத்தைத் தொடங்குகிறேன், இன்னும் 10 நாள்களில்...' என்று வலைத்தளங்களில் பதிவு வெளியிட்டிருந்தார், டி.ஜே. பிளாக்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.