அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

திருக்குறளும் அரிய தகவல்களும்

 * திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு - 1812  * திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்  * திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133  * திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380  * திருக்கு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:43 pm IST

 * திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு - 1812

 * திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்

 * திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133

 * திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380

 * திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் - 700

 * திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 250

 * திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் - 1330

 * திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000

 * திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் - 42,194

 * திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.

 * திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை.

 * திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்

 * திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி

 * திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒü

 * திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்

 * திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்

 * திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து - னி

 * திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் - ளீ, ங

 * திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள்

 * திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்

 * திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்

 * திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்.

 * திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் - பரிமேலழகர்

 * திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

 * "எழுபது கோடி' என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

 * "ஏழு' என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

 * திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது

 * திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

 * திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

 * திருக்குறள் நரிக்குறவர் பேசும் "வக்ரபோலி' மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.