திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தமிழ்ச் செல்வங்கள்: தமிழ் 2

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஒü, அஃ - என்பவை மக்கள் வாயில் இருந்து மட்டுமா வருகின்றன? உயிருள்ளவை எல்லாம் ஒலிக்கும் ஒலிகள்தாமே இவை! இவ்வொலிகள் நீளவும், குறுகவும் கேட்டலும் இயற்கை அல்லவோ!

News image
Updated On :16 நவம்பர் 2013, 8:27 pm

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஒü, அஃ - என்பவை மக்கள் வாயில் இருந்து மட்டுமா வருகின்றன? உயிருள்ளவை எல்லாம் ஒலிக்கும் ஒலிகள்தாமே இவை! இவ்வொலிகள் நீளவும், குறுகவும் கேட்டலும் இயற்கை அல்லவோ!

உயிரிகளின் ஒலியை எப்படி அழைப்பது? "உயிர்' என்று அழைப்பதுதானே முறை. உயிர் இயங்கும்! மெய்யாகிய உடலை இயக்கும்! உயிர் இயங்காவிடின் மெய் தானே இயங்காது.

"க், ங், ச், ஞ்' முதலாம் மெய்யெழுத்துகளை அப்படியே சொல்ல முடியுமா? சொல்லிப் பாருங்கள்! முடியவே முடியாது.

ஓர் உயிரை "இ' என்னும் உயிரைச் சேர்த்துத்தானே "இக்', "இங்', "இச்' "இஞ்' என்று சொல்ல முடிகிறது! இவ் வமைப்பு தமிழ் எழுத்தைச் சொல்லவும் எழுதவும் தொடங்கும்போதே, மெய்யியல் ஆகிய (தத்துவம்) உயரிய இறையியலைக் கற்பிப்பது அல்லவா!

முன்னே "இ' சேர்த்து "க்' என்பதை ஒலிக்கலாம்! இல்லையானால் "க' என, "ங' என, "ச' என, "ஞ' என ஒலிக்கலாம். எதனால்?

மெய்யெழுத்தை ஒட்டி உயிரெழுத்து ஆகிய "அ' வருகிறது அல்லவா! எந்த வண்டியையும் முன்னேயும் இயக்கல் உண்டு; தேவை ஏற்படின் பின்னேயும் இயக்கல் உண்டு அல்லவா! அப்படி இயற்கை இயங்கியல் வழிபட்ட அமைப்பு அது. குழந்தைகள் உருட்டும் வண்டி பண்டு தொட்டே உண்டு.

""பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்

முக்காற் சிறுதேர்''

என்பது பட்டினப்பாலை. நடைவண்டி இப்பொழுது எத்தனை வகையில் அமைக்கப்படுகின்றன என்பது நாம் அறியாதது இல்லையே! நடைவண்டி, மிதிவண்டி, குதியுந்து, உந்து, பேருந்து, தொடரி, வானூர்தி என எவ்வியங்கிக்கும் கால் (சக்கரம், உருளை) இல்லாமல் இயங்குகிறதா? கால் ஆகிய உருளை வடிவு வட்டம் தானே!

ஞாயிறு (கதிரோன்), திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, விண்மீன் முதலாம் எல்லாமும் சுழல்பவைதாமே! தம்மைத் தாமே சுற்றிக் கொண்டு பிறவற்றையும் சுற்றுபவை தாமே! இவை வட்டமாய் இருப்பதால்தானே இயங்குகின்றன!

அப்படி இயக்கமும் - சுழலும் - இடமாகவா, வலமாகவா? வலமாகத்தானே சுழல்கின்றன. காற்று எழுதல், தீ பரவல், நீர்ச் சுழல் அல்லது சுழி வட்டம்தானே! வலச் சுழற்சிதானே! பறவை எழும்புதல், ஆடு மாடு படுத்தல், மாந்தர் பனிவாடையில் ஒடுங்குதல் எல்லாம் வட்ட வளைதல் தானே!

இவ் வலச் சுழற்சி இயக்கம் கண்டு, வட்டெழுத்து, கோல் எழுத்து, கண்ணெழுத்து, ஓவிய எழுத்து எனக் கண்டு, ஆ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒü, ஃ என்பவற்றை "வலனேர்பு' முறையில் உயிரெழுத்தை அமைத்த அருமை அறிவியலொடு கூடிய மெய்யியல் விளக்கம் அல்லவா!

""வெட்டெழுத்துக் கொண்டு வட்டெழுத்தை முடிபு செய்யக்கூடாது'' என்பார் பாவாணர்.

தொடர்வோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.