தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

"புத்தம் வீடு' கட்டியவர்!

மேம்பட்ட சமூகத்தின் வாழ்க்கையை மட்டுமே பெரும் புதினங்களாக எழுதி மக்களிடத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த எழுத்தாளர்களுக்கு நடுவில், "புத்தம் வீடு' என்ற வட்டார வழக்கு நாவலை எழுதி, தமிழ்ப் புனைகதை வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றவர் ஹெப்ஸிபா ஜேசுதாசன்.

Updated On :

மேம்பட்ட சமூகத்தின் வாழ்க்கையை மட்டுமே பெரும் புதினங்களாக எழுதி மக்களிடத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த எழுத்தாளர்களுக்கு நடுவில், "புத்தம் வீடு' என்ற வட்டார வழக்கு நாவலை எழுதி, தமிழ்ப் புனைகதை வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றவர் ஹெப்ஸிபா ஜேசுதாசன். "வட்டார வழக்கு' என்றும், "கொச்சை மொழி' என்றும் முத்திரை குத்தி மண் சார்ந்த படைப்புகளை நிராகரித்து வந்த காலகட்டத்தில் இந்நாவல் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது. தமிழ் மொழியின் தொன்மையை உலகறியச் செய்ய தன்னாலான முயற்சிகளை ஹெப்ஸிபா மேற்கொண்டார்.

ஹெப்ஸிபாவின் தந்தை மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். கணவர் தமிழ் இலக்கியம் படித்தவர். இந்நிலையில்தான் ஹெப்ஸிபா, கணவர் ஜேசுதாஸனோடு இணைந்து தமிழில் உள்ள படைப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல நினைத்தார். அதன் தொடக்கமாக பாரதியாரின் குயில்பாட்டு மற்றும் இன்னபிற

கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

சங்க இலக்கியமான நெடுநல்வாடையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். கணவரும் இவரும் சேர்ந்து "தமிழ் இலக்கிய வரலாறு' என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்.

ஹெப்ஸிபாவுக்கு தான் சார்ந்த நாகர்கோவில் வட்டார மக்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே எழுதவேண்டும் என்ற உந்துதல் அவருக்குள் தீவிரம் கொண்டது. பெயரிடப்படாத அந்த நாவலை அவர் இரண்டுவார காலத்திலேயே எழுதி முடித்து கணவரிடம் காண்பித்தார். ஜேசுதாஸனின் நண்பராக இருந்த எழுத்தாளர் நகுலனிடம் அந்தக் கையெழுத்துப் பிரதி சென்றது. நகுலன், அதை சுந்தர ராமசாமியிடம் கொடுத்தார். சுந்தர ராமசாமி படித்தார். பின்னர் 1964-ஆம் ஆண்டு "புத்தம் வீடு' என்ற பெயரோடு அந்த நாவல் வெளியானது.

கன்னியாகுமரி மாவட்ட பனைவிளை கிராமத்தைச் சார்ந்த கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சார்ந்த நில உடைமையாளர்களுக்கும் அவர்களிடம் பனையேறித் தொழில் செய்யும் அதே சாதியைச் சார்ந்த உழைப்பாளர்களான பனையேறிகளுக்கும் இடையே காணப்படும் இடைவெளியே புத்தம் வீடு. இந்நாவல் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பலருடைய பாராட்டையும் பெற்றது.

ஏப். 9 (9.4.1925) ஹெப்ஸிபாவின்

பிறந்தநாள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.