பறவைகள் சில ஒன்று கூடுகின்றன; மகிழ்வாகக் கூச்சலிடுகின்றன; எதற்காகவோ சண்டையும் போடுகின்றன. அவற்றின் ஒலியைக் குழந்தை நிலையில் இருந்து மாந்தன் கேட்கிறான்; அவ்வொலி "கொக்', "கொக்' என அவனுக்குப் படுகின்றது. அவ்வொலியால் அதனைக் "கொக்கு' என்று வழங்குகின்றான். பின்னர் அப்பெயரைப் பலரும் வழங்குகின்றனர். அப்பெயர் சூட்டிய நாள் தொட்டு இன்று வரை நிலைத்துவிட்டது.
"கொக்', "கொக்' என்றதால் வந்த பெயர், அப்பறவையைக் காணாத இடத்தும் வழங்கப்பட்டது. வரிவடிவம் தோன்றிய பின் கொக்கு என எழுதவும் பட்டது. ஓவியமாக்கவும் பட்டது. பாடல்களிலும் இடம்பெற்றது.
கொல்லுத் தொழில் செய்பவர் ஒரு கம்பியை எடுத்து வளைவாகச் செய்தார். அவருக்குக் கொக்கின் கழுத்து நினைவுக்கு வந்தது. அக் கழுத்தின் வளைவு போல் தாம் செய்த கம்பி வளைவு இருந்ததால் "கொக்கி' எனப் பெயரிட்டார். அப் பொருளொடு அப்பெயரும் இன்று வரை நிலைத்துவிட்டது. கொக்கி பலவகைகளில் இந்நாளில் பயன்பாட்டுப் பொருளாக விளங்குகின்றது.
பொற்கொல்லர் ஒருவர் பொன்னாலோ வெள்ளியாலோ ஒரு தொடரி (சங்கிலி) செய்கின்றார். அதனை வளையம் வளையமாய்ச் செய்து ஒரு முனையையும் மறு முனையையும் பூட்டப் பூட்டுவாய் செய்கிறார். அப் பூட்டுவாய் கொக்கின் வாய்போல் இருந்ததால் "கொக்கு வாய்' எனப் பெயரிடுகிறார். கொக்குவாய் கொக்கில் எனவும் வழக்கில் நின்றது.
ஒரு புழு நெளிந்து வளைந்து சென்றது. அதன் நெளிவு வளைவுகளை அறிந்த ஆய்வாளன் கொக்கின் வடிவத்தை ஒப்பிட்டான். "கொக்கிப் புழு' எனப் பெயரிட்டான்.
ஒரு கொக்கு மற்றொரு கொக்குடன் ஏதோ ஒரு காரணத்தால் சினம் கொண்டு கூச்சலிட்டுக் காலைத்தூக்கித் தூக்கிச் சண்டையிட்டது. அப்படியே இருவர் காலையும் கையையும் தூக்கிச் செருக்குவதைக் கண்டான். கொக்குச் சண்டையை நினைவில் கொண்டான். "என்ன கொக்கரிக்கிறாய்?' என்றான். கொக்கு + அரி =கொக்கரி. அரி என்பது ஒலி. சிலம்பின் உள்ளீடு பரல் ஒலித்தலால் "அரி' எனப்படும். பாண்டியன் தேவியின் சிலம்பு "முத்துடை அரியே' என்றதும், கண்ணகியார் தம் சிலம்பு "மணியுடை அரியே' என்றார்.
அரிக்குரல் கிண்கிணி என்பது குழந்தையர் காலணி. அரிக்கூடு இன்னியம் என்பது இசைக் கருவி.
கொக்கின் ஒலிபோல் ஒலிக்கும் இசைக்கருவி ஒன்றை ஒருவன் உண்டாக்கி னான். கொக்கின் ஒலியை மறவாமல் கொக்கரி என்றும், கொக்கரை என்றும் பெயரிட்டான். ஒல்லியாய் உயர்ந்த ஒருவன் நெடுங்கால், ஒருவனைக் கவர்ந்தது. கொக்குக் கால்களோடு ஒப்பிட்டான். கொக்கன், கொக்குக் காலன், கொக்கையன் எனப் பெயரிட்டான்.
உயரமான இடத்தில் ஒட்டடை தட்டவோ, வண்ணமடிக்கவோ நெடிய கால்களைக்கொண்ட ஒன்றைச் செய்தான். கொக்குக் கால்போல் அஃதிருந்ததால் "கொக்குக் காலி', "கோக்காலி' எனப் பெயரிட்டான். கொக்கின் ஒலிக் கொடை எத்தனை சொற்கொடையாக உள்ளது என்பதை எண்ணுக!
தொடர்வோம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இந்தியாவுக்கு விமான சேவையை விரிவுபடுத்த மாலத்தீவு திட்டம்!
எல்ஐகே டிரைலர்!
திருமாவளவன் விலகல்! விசிகவில் காங்கிரஸ் முன்னாள் தலைவரின் மகனுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


