திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தமிழ்ச் செல்வங்கள்: பல்

காலைக் கடன்களில் பல் துலக்குதல் கட்டாயமானது. பல் துலக்காமல் படுக்கையிலேயே சுவை நீர் பருகி மீளப் படுக்கும் சோம்பர் பெருகும் நிலையில்

News image
Updated On :25 பிப்ரவரி 2017, 8:49 pm

காலைக் கடன்களில் பல் துலக்குதல் கட்டாயமானது. பல் துலக்காமல் படுக்கையிலேயே சுவை நீர் பருகி மீளப் படுக்கும் சோம்பர் பெருகும் நிலையில், "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி' என வாழ்வாரும் உள்ளமை அறிவோம்! வகை வகைப் பொடிகள், பசைகள், தேய்ப்புத் தூரிகைகள் பெரும் வணிக வளமாகவும் - விளம்பரமாகவும் உள்ளமை எவரும் அறிந்தது.
"பல்' என எதனால் பெயர் பெற்றது?
மூளை, கண், காது, நா, இதழ், மூக்கு, குழல், குடல், கழிப்பு ஈரல்குலை என்பவை இரண்டு இரண்டாக அமைய, முப்பத்து இரண்டாக அமைந்தது எது? பல் தானே! பல, பலப் பல, பலபல, பற்பல என்பவற்றை வழங்கியதும் பல் தானே.
மாந்தர் முதல் பல்லுள்ள உயிரிகளின் பற்களைப் பார்த்தால் ஓர் ஒற்றுமை தோன்றும். பல் வெண்மையாக இருக்கும் என்பது அது. "பல்' வெண்ணிறத்தது. கதிர் வெளிப்பட்டு விடிதலைப் பலபல எனப் பொழுது விடிந்தது எனல் வழக்கம். பலபல, "பள பள' எனவும் ஆகும்; பளபளப்பு, பளிங்கு, பளிச்சு, பளார் எனவும் விரியும். மாந்தர் மதிப்பு, ""பல்லால் பாதி சொல்லால் பாதி'' என்பர். மரங்களுள் ஒன்று பலா! பலவு என்பதும் அது. ஏன் அப்பெயர்? ஒரு பழத்தில் பல சுளைகள் இருக்கும்! பல் போல் நிறமும் வடிவும் கொண்டும் இருக்கும். அதனால் "பலா' எனப்பட்டது.
அமர, சாய, படுக்க அமைந்த மரச் சட்டம் பலவற்றின் இணைப்பு ஆதலால் "பலகை' எனப்பட்டது. பரிய மரத்தின் தகடு ஒன்றே ஆயினும் அப் பலகைப் பெயரே கொண்டது. பல கம்புகளை இணைத்துக் கட்டித் தூக்கிச் செல்ல அமைந்தது, பல்லக்கு; பல்லாக்கு என்பதும் அது.
பல கம்புகளை அல்லது சட்டங்களை இணைத்துக் கட்டிய நீர் ஊர்தி பஃரி (படகு, ஓடம்). பல தாழிசை, பஃறாழிசை (கலிப்பா வகை) பல இசைக் கருவிகள் ஓரிடத்து இசைக்கப்படுவது. பல்லியம்! இசைப்பவர், பல்லியத்தர், காற்று வர அமைக்கப்படுவது பல கணி.
""மான்கண் காலதர் மாளிகை'' என்பது சிலம்பு. வேளாண் தொழிலில் தொழி உழவைச் சமன்படுத்தப் "பலகை' யடிப்பர். பயிர் அடர்த்தியைக் கலப்பாக்கப் பல் போலும் குச்சிகள் பல அமைந்த "பலகு' என்பதைப் பயன்படுத்துவர்.
பழ நாளில் அது "பல்லியாடுதல்' எனப்பட்டது.
மருத்துவத் துறைகளுள் ஒன்று "பல் மருத்துவம்'. வாணிகத்துள் ஒன்று "பல சரக்கு'; பல சரக்குக் கடை. ""பல் பண்டம் பகர்ந்து வீசும், தொல் கொண்டித் துவன் றிருக்கை'' என்பது பட்டினப்பாலை. உயர்திணைப் பால்களுள் ஒன்று "பலர் பால்'. அஃறிணைப் பால்களுள் ஒன்று "பலவின் பால்'. பல துறைகளின் கூட்டம் "பல்லாயம்'. பல மொழி, பன் மொழி, பல நோக்கு, பன்னோக்கு.
பல நாட்டு அவை, "பன்னாட்டவை'.
பல் கால் கூறுதல் "பன்னல்', பன்னுதல்.
பல சுனைகளையுடைய பருத்தி, "பன்னல்'.
ஒரு காலத்தில் பல்லோடு இருந்து பின்னர் பயனற்றிழந்ததால் அறிவிக்கும் வரலாற்றுப் பெயர் "பன்றி'.
நுண்துளியே எனினும் அதுவும் பலவின் கூட்டே என்பதைத் தன் பெயரால் விளக்குவது பனி! அதன் பெருக்கம் போல்வது பனிநீராம் பன்னீர்! இன்னும் எண்ணின் பலவாம்!
-தொடர்வோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.