மெல்லினமும் மென்மையும்

தமிழ் மொழியில் எழுத்துகள் உயிர், மெய் எனப் பகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மெல்லினமும் மென்மையும்

தமிழ் மொழியில் எழுத்துகள் உயிர், மெய் எனப் பகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் வல்லினத்தை ஏஹழ்க் ஸ்ரீர்ய்ள்ர்ய்ஹய்ற்ள் என்பர். இவை வல்லொலிகள். இவற்றை உச்சரிப்பதற்கு மிகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டும். மெல்லினத்தை ள்ர்ச்ற் ஸ்ரீர்ய்ள்ர்ய்ஹய்ற்ள் என்பர். இவை மெல்லொலிகள், இவற்றை மூக்கொலிகள் (ய்ஹள்ஹப்) என்றும் கூறுவர். இவை கேட்பதற்கு இனிமையானவை. இடையினத்தை ம்ங்க்ண்ஹப் ஸ்ரீர்ய்ள்ர்ய்ஹய்ற்ள் என்பர். இவை வல்லினம் போல் வலிந்து உச்சரிக்கப்படாமல், மெல்லினம் போல் மெலிந்து உச்சரிக்கப்படாமல் இடைப்பட்ட நிலையில் உச்சரிக்கப்படுவதால் இப் பெயர் பெற்றன.
நாம் பேசும்போது பலவிதமான உணர்வு நிலைகளில் இருக்கிறோம். ஒருவர் கோபமாகப் பேசலாம், குழந்தைகளை அன்பாகக் கொஞ்சலாம் அல்லது நாட்டு நடப்பைப் பற்றி சாதாரணமாகப் பேசலாம். அவ்வாறு பல உணர்வு நிலைகளிலிருந்து பேசும்போது, அவர்கள் பயன்படுத்தும் சொற்களிலுள்ள எழுத்துகளின் தன்மைக்கும், அவர்களின் உணர்ச்சிகளுக்கும் ஏதேனும் ஒற்றுமை இருக்குமா என்ற ஐயம் எழுந்தது. இதனைத் தீர்ப்பதற்காக ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மூன்று வேறுபட்ட கருத்துகளைக் கூறும் திருக்குறளில் கையாளப்பட்டுள்ள சொற்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று வெவ்வேறு பொருள் பற்றிப் பேசும் திருக்குறளில் உள்ள சொற்களில் காணப்படும் வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை, கணினி நிரல் மூலம் கணக்கிடப்பட்டது. இதில் கிடைத்த முடிவு வருமாறு:
திருக்குறளில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குறள்களின் எண்ணிக்கையில் வேறுபாடு இருப்பதால் அவற்றில் காணப்படும் எழுத்துகளின் எண்ணிக்கையைவிட, அந்த எண்ணிக்கைகளுக்குரிய விழுக்காடுகள் உண்மையான நிலையைக் குறிக்கும். இவை இந்த அட்டவணையில் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறம், பொருள் ஆகிய பகுதிகளுக்குரிய வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய எழுத்துகளின் விழுக்காடு ஏறக்குறைய ஒரே அளவுள்ளதாக இருக்கக் காண்கிறோம்.
ஆனால், இன்பத்துப்பாலில் மெல்லின எழுத்துகளின் விழுக்காடு மற்ற பால்களில் வருவதைக் காட்டிலும் அதிகமாக இருப்பதைக் காண்கிறோம். இன்பத்துப்பால் என்பது ஒரு குடும்பத்தில் தலைவன், தலைவி ஆகியோருக்கிடையே நிலவும் இன்பமான சூழலை விவரித்துக் கூறுவது. எனவே, இது மென்மையான உணர்ச்சிகளைப் பற்றிக் கூறும் பகுதியாகும். இந்த மென்மையான உணர்ச்சிகளைப் பாடுவதற்குத் திருவள்ளுவர் மெல்லின எழுத்துகளை மிகுதியும் பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகிறது.
இந்த ஆய்வு இன்னும் சற்று ஆழமாக நடத்தபட்டது. "தங்கம்' என்ற சொல்லில் உள்ள த, க ஆகியவை வல்லினங்கள். ங், ம் என்பன மெல்லினங்கள். இந்த வல்லினங்களில் க என்பது ங்-க்கு அடுத்து வருவதால் ஞ்ஹ என்ற மெல்லொலிப்பைப் பெறுகிறது. எனவே, இவ்வாறு வருகின்ற ஒலிகளை மெலிந்த வல்லினங்கள் (ய்ஹள்ஹப்ண்க்ஷ்ங்க் ட்ஹழ்க் ஸ்ரீர்ய்ள்ர்ய்ஹய்ற்ள்) எனலாம். "மகன்' என்ற சொல்லில் உள்ள க என்பது ட்ஹ என்ற ஒலிப்பைப் பெறுகிறது. இதைக் குழைந்த வல்லினம் (ள்ர்ச்ற்ங்ய்ங்க் ட்ஹழ்க் ஸ்ரீர்ய்ள்ர்ய்ஹய்ற்) எனலாம். "மக்கள்' என்ற சொல்லில் வரும் க், க ஆகியவை வலிந்த ஒலிப்பையே (ஏஹழ்க்) பெறுகின்றன. இவ்வாறு வல்லின எழுத்துகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன. திருக்குறளில் இவை வரும் எண்ணிக்கை இதோ:
இதிலும் மென்மையாக்கப்பட்ட மெலிந்த வல்லினங்களின் விழுக்காடு இன்பத்துப்பாலில் மிகுந்திருப்பதைக் காணலாம். ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய இந்த ஆறு மெல்லின எழுத்துகளும் திருக்குறளில் கீழ்வருமாறு பயன்படுத்தப்பட்டுள்ளன.


இந்த மெல்லொலிகளுள் ண், ந் ஆகியவை இன்பத்துப்பாலில் மட்டும் மிகுந்து வருவதைக் காண்கிறோம். ஆக, மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ண், ந் ஆகிய மெல்லினங்களே பெரிதும் பங்காற்றுகின்றன. இந்த ஆய்வின் மூலம் திருக்குறளில் மென்மையான உணர்வுகளைக் கையாள மெல்லினங்களே மிகுதியும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது உறுதியாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com