பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
செருந்தி மரங்கள் பெரிய உப்பங்கழியின்கண் தாழ்ந்து விளங்கும் அலைகளை வீசுகின்ற குளிர்ந்த கடல் நாடனே! அஞ்சாது உராய்ந்து நடப்பவர்களை அவர் உள்ளங் கால்கள் வருந்தும்படி நெருஞ்சி முள்ளும் ஊறு செய்வதில்லை.


உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவா
நெருஞ்சியும் செய்வ(து) ஒன்(று) இல்லை - செருந்தி
இருங்கழித் தாழும் எறிகடல் தண்சேர்ப்ப!
பெரும்பழியும் பேணாதார்க்கு இல். (பாடல்-170)
செருந்தி மரங்கள் பெரிய உப்பங்கழியின்கண் தாழ்ந்து விளங்கும் அலைகளை வீசுகின்ற குளிர்ந்த கடல் நாடனே! அஞ்சாது உராய்ந்து நடப்பவர்களை அவர் உள்ளங் கால்கள் வருந்தும்படி நெருஞ்சி முள்ளும் ஊறு செய்வதில்லை. மிக்கபழியும் தன்னை அஞ்சிப் பாதுகாவாதவர்களுக்கு மனவருத்தம் செய்தல் இல்லை. (க-து.) நல்லோர் பழிக்கு அஞ்சுவர், தீயோர் அஞ்சார். "பெரும்பழியும் பேணாதார்க்கு இல்' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...