வில​கு‌ம் நாண‌ம்:  படைப்​பு‌க் க‌ற்​பனை‌! (C‌r‌e​a‌t‌i‌v‌e ‌I‌m​a‌g‌i‌n​a‌t‌i‌o‌n)

கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்ற காதலன், கார் தொடங்கியும் வரவில்லை. கார்காலம் தொடங்கியதற்கான அறிகுறியாக முல்லைக் கொடி அரும்பு வைத்துவிட்டது.
வில​கு‌ம் நாண‌ம்:  படைப்​பு‌க் க‌ற்​பனை‌! (C‌r‌e​a‌t‌i‌v‌e ‌I‌m​a‌g‌i‌n​a‌t‌i‌o‌n)
Published on
Updated on
1 min read


கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்ற காதலன், கார் தொடங்கியும் வரவில்லை. கார்காலம் தொடங்கியதற்கான அறிகுறியாக முல்லைக் கொடி அரும்பு வைத்துவிட்டது. பிரிவாற்றாமல் வருந்தி வருந்தித் தலைவி தன் அறிவும் கலங்கி நிற்கிறாள்.

"அவன் தன்னை மறந்துவிட்டான்' என்று ஏமாற்றமுற்றவளாய் வருந்துகிறாள். அரும்பு நிறைந்த முல்லைக் கொடியைப் பார்க்கிறாள். முல்லைக்கொடி மட்டுமன்று; கார்காலம்கூட நகைக்கிறதாம். அது பிரிவால் வருந்தும் தன்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பதுபோல் தோன்றுகிறது அவளுக்கு. நகைக்கும் கார்காலத்தின் பற்கள் அந்த முல்லைக் கொடியின் அரும்புகளாக (குறு.126) உள்ளனவாம்.

அவன் மீதுள்ள காதல் மிக மிக... பிறர் என்ன எண்ணுவார்களோ என்ற கவலையும் அச்சமும் குறைந்து போகிறது. பிறர்க்கு அஞ்சியும் தயங்கியும் ஒழுகும் இயற்கையும் மாறிவிடுகிறது. அப்போது, தன் போக்கில் ஒரு மாறுதலை உணர்கிறாள் காதலி.

இது வரையில் தன்னைவிட்டு சிறிதும் நீங்காமல் நின்ற நாணம் என்னும் பண்பு, இப்போது மெல்ல மெல்ல நீங்கிச் செல்வதாக உணர்கிறாள். அந்த நாணம் தன்னிடம் இத்தனை காலமாக இருந்தும், இப்போது பிரிந்துபோகிறதே என்று வருந்துகிறாள்.

ஆயினும் அதற்கு இனி வாழ்வு இல்லாததைக் கருதி இரங்குகிறாள். தோழி தலைவனுடன் போகவேண்டுமென்று கூற, தலைவி அவனுடன் செல்லுதலால் என் நாண் அகலுமென்று இரங்கிக் கூறிய, புலவர் வெள்ளிவீதியாரின் பாடல் இது.

"அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைந்நில் லாவே!; (குறுந்.149)

கடல் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நள்ளிரவிலும் அதன் ஒலி அடங்குவதில்லை. இது இயற்கை. ஆனால், பிரிவுத்துயரால் வருந்திய காதலிக்கு அதன் இயற்கையான ஒலி, ஏதோ துன்பத்தால் எழும் ஒலியாகக் கேட்கிறது. கடலே! நீயும் என்போல் துயருற்றுப் புலம்புகிறாயோ? உன்துயருக்குக் காரணமானவர் யார்? நள்ளிரவிலும் உன் குரல் கேட்கிறதே? (குறு...163) என்கிறாள்.

"யாரணங் குற்றனை கடலே....
நள்ளேன் கங்குலும் கேட்குநின் குரலே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com