இரட்டைச் சொற்கள்!

தமிழர்தம் வாழ்வில் பட்ட அறிவை "பட்டறிவு'(அனுபவ அறிவு) என்பர். சொல்லும் பழமொழிகளைச் "சொலவடை' என்பர்.

தமிழர்தம் வாழ்வில் பட்ட அறிவை "பட்டறிவு'(அனுபவ அறிவு) என்பர். சொல்லும் பழமொழிகளைச் "சொலவடை' என்பர்.

அதைப் போலவே, மக்கள் தம்மை மீறிப் பயன்படுத்தும் இரட்டைச் சொற்கள் ஏராளம். ஆனால், மக்கள் தாம் நினைத்துச் சொல்லும் இரட்டைச் சொல்லுக்கும், அதன் உண்மையான பொருளுக்கும் தொடர்பே இருக்காது. அவற்றின் உள்ளர்த்தமே உண்மையான பொருளாகும். சிலவற்றை நோக்குவோம்:

அக்குவேர் ஆணிவேர்: அக்குவேர் என்ற செடியின் கீழுள்ள மெல்லிய வேர். ஆணிவேர் என்பது செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் உறுதியான வேர். 

அரை குறை: அரை என்பது ஒரு பொருளின் சரிபாதி அளவு. குறை அந்தச் சரிபாதி அளவில் குறைவாக உள்ளது குறை.அக்கம் பக்கம்: அக்கம் என்பது தன்வீடு தானிருக்கும் இடம். பக்கம் என்பது பக்கத்து வீடும் பக்கத்தில் உள்ள இடமும். ஆட்டம் பாட்டம்: ஆட்டம் தாளத்திற்குப் பொருந்தியோ பொருந்தாமலோ ஆடுவது. பாட்டம் ஆட்டத்திற்குப் பொருந்தியோ பொருந்தாமலோ ஆடுவது.

ஏட்டிக்குப் போட்டி: ஏட்டி என்பது விரும்பும் பொருள் அல்லது செயல். போட்டி என்பது விரும்பும் பொருள் அல்லது செயலுக்கு எதிர்வரும் ஒன்று. 

ஒட்டு உறவு: ஒட்டு என்பது ரத்தத் தொடர்புள்ளவர்கள். அதாவது தாய், தந்தை, உடன் பிறந்தார், மக்கள். உறவு என்பது பெண் கொடுத்த அல்லது பெண் எடுத்த வகை உறவினர். 

கடைகண்ணி: கடை என்பது தனித்தனியாக அமைந்த வணிக நிலையம், கண்ணி என்பது தொடர்ச்சியாகக் கடைகள் அமைந்த கடைத் தெரு.

கூச்சலும் குழப்பமும்: கூச்சல் என்பது துன்பத்தில் சிக்கியுள்ளோர் போடும் அவல ஒலி. குழப்பம் என்பது அவல ஒலியைக் கேட்டு அங்கு வந்தவர்கள் போடும் இரைச்சல். 

குண்டக்க மண்டக்க: குண்டக்க என்பது இடுப்புப் பகுதி, மண்டக்க என்பது தலைப் பகுதி. வீட்டில் பொருள்கள் சிதறி மாறி மாறி இருத்தலைக் குண்டக்க  மண்டக்க என்பர். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com