தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

நல்ல நெறிகளை மனத்திற் கொண்டு, நல்ல அறநெறிகளை மேற்கொள்ளாதவரையும், சான்றோர்கள் அவர்களுடைய வன்மையைச் சிதைத்து அடங்கச் செய்து, நல்லற நெறியை அறிவுறுத்துதல் முறை. மனம்

News image
Updated On :22 ஆகஸ்ட் 2021, 11:13 am

தினமணி

உலப்பில் உலகத்து உறுதியை நோக்கிக்
குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்
மலைத்தழுது உண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப்பால் பெய்து விடல். (பாடல்-212)

நல்ல நெறிகளை மனத்திற் கொண்டு, நல்ல அறநெறிகளை மேற்கொள்ளாதவரையும், சான்றோர்கள் அவர்களுடைய வன்மையைச் சிதைத்து அடங்கச் செய்து, நல்லற நெறியை அறிவுறுத்துதல் முறை. மனம் மாறுபட்டு அழுது பாலுண்ண மறுக்கும் குழந்தையைத் தாய்மார்கள் வருத்திப் பாலூட்டுவது போன்ற சிறந்த செயலாகும் அது. "அலைத்துப்பால் பெய்து விடல்' என்பது பழமொழி.(திருத்தம்:  212-இல் (பாடல் எண்) இடம்பெற வேண்டிய பாடல் வரிசையில் பாடல்-216 வெளியானதால், இப்போது 212-ஆவது பாடல் இடம்பெறுகிறது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.