செல்வம் ஊழால் அமைவது
ஆஅய் வளர்ந்த அணிநெடும் பெண்ணையை
ஏஎய் இரவெல்லாம் காத்தலும் - வாஅய்ப்
படற்பாலார் கண்ணே படுமே; பொறியும்
தொடற்பாலார் கண்ணே தொடும். (பாடல்-205)
உண்டாகி வளர்ந்த அழகிய உயர்ந்த பனைமரத்தை, அதன் பழத்தைப் பெறுவதற்கு விரும்பி அடைந்து இரவெல்லாம் அதனடியிலே காத்துக் கிடந்தாலும், தம் வாயினிடத்தே படுதற்குரிய நல்ல ஊழ் உள்ளவரிடத்திலேயே அந்தப் பனம் பழம் கிடைக்கும்.
அதுபோலவே, இலக்குமியும் (செல்வம்) சென்று தீண்டுதற்கு உரியவரிடத்திலேயே சென்று தீண்டுவாள். செல்வம் முயற்சியால் மட்டும் வராது; முன்வினைப் பயனாக நல்ல ஊழும் வேண்டும். "பொறியும் தொடற்பாலார் கண்ணே தொடும்' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடி தவெக வேட்பாளரை காணவில்லை! வேட்புமனு நிராகரிப்பு!
செந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!

”என் வேட்புமனுவில் பிரச்னை இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்கள்!” ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

தோசை மாவு விஷமானதில் 2 பேர் பலி! தோண்டியெடுக்கப்படும் குழந்தை உடல்
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


