முன்றுறையரையனார்
மலையகங்கள் பலவற்றை உடைய நாடனே! மனத்து ஒருமைப்பாட்டுடனே கலந்து பழகியவரிடத்தும் ஒரு செயலைப் பற்றிச் சொல்வதானால், எடுத்துச் சொல்லும் மரபினின்று வழுவாமல், அவர் அதனால் உவப்பு உடையவராக


புரையக் கலந்தவர் கண்ணும் கருமம்
உரையின் வழுவா துவப்பவே கொள்க
வரையக நாட! விரையிற் கருமம்
சிதையும் இடராய் விடும். (பாடல்-227)
மலையகங்கள் பலவற்றை உடைய நாடனே! மனத்து ஒருமைப்பாட்டுடனே கலந்து பழகியவரிடத்தும் ஒரு செயலைப் பற்றிச் சொல்வதானால், எடுத்துச் சொல்லும் மரபினின்று வழுவாமல், அவர் அதனால் உவப்பு உடையவராக அதனை ஏற்றுக்கொள்ளுமாறு சொல்வதையே மேற்கொள்க. அவசரப்பட்டால், காரியம் கெட்டுவிடும்; அதனால் துன்பமும் வரும். "விரையிற் கருமம் சிதையும் இடராய் விடும்' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...