திருக்கோவையாரில் இறைச்சிப் பொருள்

ஒரு பாடலைப் படித்தவுடன், அதனோடு தொடர்புடைய பல எண்ணங்கள் தோன்றும். அதனை இறைச்சிப் பொருள் என்று தொல்காப்பியம் கூறும். "இறைச்சி தானே பொருள் புறத்ததுவே' என்பது நூற்பா.

ஒரு பாடலைப் படித்தவுடன், அதனோடு தொடர்புடைய பல எண்ணங்கள் தோன்றும். அதனை இறைச்சிப் பொருள் என்று தொல்காப்பியம் கூறும். "இறைச்சி தானே பொருள் புறத்ததுவே' என்பது நூற்பா. இவ்விறைச்சிப் பொருள் அமைந்த திருக்கோவையார் பாடல் ஒன்றைக் காணலாம்.

நேயத்ததாய் நென்னல் என்னைப் புணர்ந்துநெஞ்சுநெகப்போம்
ஆயத்ததா யமிழ் தாயணங் காயரணம் பலம்போல்
தேயத்ததாய் என்றன்  சிந்தையதாய்த் தெரியிற்பெரிதும்
மாயத்த தாகியிதோ வந்து நின்றதென்  மன்னுயிரே

நெடுநல் உள்ள மகிழ்வோடு என்னைக் கூடிப் பின் நேயம் இல்லாதது போல், என் நெஞ்சு உடையும் வண்ணம் நீங்கினாய்;  தலைவி இன்பத்தைச் செய்தலின் அமிர்தமாம். வராமல் இருப்பது துன்பச் செயலாகும். 

அதனைப் பாடலில் "அணங்கு' என்றார். தலைவி தோற்றப் பொலிவால் இறைவனது பொன்னம்பலம் போல ஒளியை உடையதால், புலப்படாது வந்து என் சிந்தையின்கண்ணதாய், வந்து நின்றது எனது மன்னுயிர் என்பது முதற்பொருள். 

என்னிடம் அருளுடைமையோடு, முற்காலத்து என்னை வந்து கூடி, அருளில்லாதது போல என் நெஞ்சு உடையும் வண்ணம் போய், தன் மெய்யடியார் குழாத்ததாய், நினைதோறும் அமிர்தம் போல, இன்பஞ் செய்து, கட்புலனாகாமையின் துன்பஞ்செய்து, அம்பலம் போலும் நல்ல தேசங்களின் கண்ணதாய் வந்து என் மனத்தகத்தாய், இத்தன்மைத்தாகலின், பெரிதும் மாயத்தே உடையதாய், எனது நிலைபெறும் உயிர்வந்து தோன்றி நின்றது என்று மற்றொரு பொருளாக இறைச்சி தோன்றியது. 

இதன் உண்மைப் பொருள், வாதவூரர் திருப்பெருந்துறையில் தமக்கு குருவாக எளிவந்து அருள் செய்து மறைந்தருளிய இறைவன், மீண்டும் தம் கண்காண எழுந்தருளிய அற்புத நிகழ்ச்சியை நினைந்து, வியந்து போற்றும் நிலையில் அமைந்திருத்தல் மகிழத்தக்கது என்றும், அகத்திணை ஒழுகலாற்றிற்குரிய கிளவித் தலைவன், தலைவியைத் தனது உயிரெனக் கண்டு வியந்துரைப்பதாக அருளிச் செய்யப்பட்ட இத்திருப்பாடல் அடிகள், தம்மை வலிய வந்து ஆண்டருளிய இறைவனை நினைந்து, அம்முதல்வனே - அவனருளிய திருவருளை வியந்து போற்றுதலாகிய பொருளும், வெளிப்பட்டுத் தோன்றுமாறு அமைந்த நுட்பம் உய்த்துணர்ந்து போற்றத்தக்கதாகும்' - என்ற இளம்பூரணர் உரையை உன்னி உன்னி மகிழலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com