பழமொழி நானூறு

ஆடுகளை மேய்க்கும் இடைச்சிப் பெண் ஒரு நாட்டின் அரசி ஆனபோது பாலருந்த நேரிட்டபோது, இப்பால் கரு சுமந்த பெண் ஆட்டிடம் இருந்து கறக்கப்பட்டது என்று சொல்லி அருந்த மறுத்தாள்.
பழமொழி நானூறு

காப்பான் மட மகள், காப்பான் கைப்பட்டிருந்தும்,
மேய்ப்பு ஆட்டது என்று உண்ணாள் ஆயினாள் - தீப்புகைபோல்
மஞ்சு ஆடு வெற்ப! மறைப்பினும் ஆகாதே,
தம் சாதி மிக்குவிடும்.        (பாடல்: 285)

ஆடுகளை மேய்க்கும் இடைச்சிப் பெண் (மற்றவர் இவள் பிறந்த குலத்தை அறியாத சூழலில்) ஒரு நாட்டின் அரசி ஆனபோது பாலருந்த நேரிட்டபோது, இப்பால் கரு சுமந்த பெண் ஆட்டிடம் இருந்து கறக்கப்பட்டது என்று சொல்லி அருந்த மறுத்தாள். அதன் மூலம் தன் குலத்தைப் புலப்படுத்தி விட்டாள். ஒருவர் குல ஒழுக்கத்தை மறைத்தாலும் அது மறைபடாது மற்றவர்க்குத் தெரியுமாறு வெளிப்பட்டு விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com