பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
By | Published On : 17th July 2022 04:50 PM | Last Updated : 17th July 2022 04:50 PM | அ+அ அ- |

அகந்தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி
இகந்துழி விட்டிருப்பின் அஃதால்-இகந்து
நினைந்து தெரியானாய் நீள்கயத்துள் ஆமை
நனைந்துவா என்று விடல். (பாடல்-263)
உள்ளத்திலே தூய்மை இல்லாதவர்களை மிகவும் பெரியவர்களாக ஆக்கி, தனக்குத் தொலைவான இடத்திலே விட்டிருந்தால், அவர்கள் உறுதியாக இவனுக்கு உதவியான ஒரு செயலையுமே செய்யமாட்டார்கள். அப்படி விடுவது, ஆமையைப் பிடித்த ஒருவன், அதனை "நீண்ட குளத்தினுள்ளே போய்க் குளித்து விட்டு வா' என்று அதன் தன்மை அறியாமல் போகவிட்ட செயலொடு ஒக்கும். "நீள் கயத்துள் ஆமை நனைந்து வா என்று விடல்' என்பது பழமொழி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...