திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இலக்கியங்களில் நீர்நிலைகள்

தமிழரின் ஐந்நிலப் பாகுபாடு நீரினை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது எனலாம்.

News image
Updated On :16 ஏப்ரல் 2023, 12:36 pm

பெ. சுப்ரமணியன்

தமிழரின் ஐந்நிலப் பாகுபாடு நீரினை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது எனலாம்.

நீரற்ற நிலம் பாலையாக அங்கு குடியிருப்புகளும் இல்லையாயின. குடியிருப்புகள் நீர்நிலைகளைச் சார்ந்தே எழுந்தன என்பதனைப் புலப்படுத்துவதாகப் பிறநலக் குறிப்புகள் பல அமைகின்றன.

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்பருஇலைக் குளவி யொடு 
                                               பசுமரல் கட்கும்
காந்தள் அம்சிலம்பில் சிறுகுடி 
என்பதில் குறிஞ்சியும்,
பல்கால், யாம் கான் யாற்று 
                    அவிர்மணல் தண்பொழில்
அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி
முல்லை குருந்தொடு முத்தி வேய்ந்து 
என்பதில் முல்லையும்,
படுவேல் மத்தி கழாஅர் முன்றுறை
நெடுவெண் மருதொடு வஞ்சி சாய
விடியல் வந்த பெருநீர்க் காவிரி 
என்பதில் மருதமும்,
புதுமணல் கானல் புன்னை நுண்தாது
கொண்டல் அசைவளி தூக்குதொறும் 
                                                                 குருகின்
வெண்புறம் மொசிய வார்க்கும் 
                                                         தெண்கடல்
கண்டல் வேலிய ஊர் 
என்பதில் நெய்தலும் சான்றாகின்றன.
நீர்நிலைகள் பல்வேறு பெயர்களில் வழங்கப்பெறுகின்றன. அத்தகைய நீர்நிலைகள் தொடர்பான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன.
நீர் நசைஇக் குழித்த அகழ் சூழ் 
                                             பயம்பின் (பெரும்)
குண்டுநீர் இலஞ்சி (குறுந்தொகை)
கல்லதர்ச் சிறுநெறிப் பரல் அவல் 
                                 ஊரல் சிறுநீர் (நற்றினை)
நீத்துடை நெடுங்கயம் (பெரும்)
கல்விடத்து இயற்றிய வட்டுவாய்க் 
                                                                         கிடங்கு
பாழூர்க் கிணறு (புறநானூறு)
தோள் தாழ் குளம் (பெரும்)
ஊருண் கேணி (புறம்)
காமர் வியன் துறை (புறம்)

கிணறுகளில் பலவகை உள்ளன. கடல் அருகில் உள்ள கிணறு "ஆழிக்கிணறு' எனவும், படிக்கட்டுகளைக் கொண்ட கிணறு "தொடுகிணறு' எனவும், ஆற்றில் நீர்வரத் தோண்டுவது "பிள்ளைக்கிணறு' எனவும், ஏரியின் நடுவில் உள்ள கிணறு "பூட்டைக் கிணறு' எனவும் அழைக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.