

பூ உட்கும் கண்ணாய் } பொறுப்பர் எனக் கருதி,
யாவர்க்கே ஆயினும் இன்னா செயல் வேண்டா
தேவர்க்கும் கைகூடாத் திண்அன்பினார்க்கேயும்
நோவச் செயின், நோன்மைஇல். (பாடல்: 335)
நல்ல மலரே நாணம் உறும்படியான கண்ணழகு பெற்றவளே! எந்த அளவுத் துன்பம் செய்தாலும் பொறுத்து ஏற்றுக் கொள்வார் என்று எவருக்கும் துன்பம் இழைத்தல் வேண்டா. கடவுளர்க்கும், மிகுந்த அன்புடைய நல்லோர்க்கும் மற்றவர் மனம் நோவுமாறு செய்தால் அவர்களும் கூட மனத்தளவிலாவது வருந்தாது இருப்பதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.