பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

இரண்டு மீன்களைப் போன்ற கண்களை உடைய தங்கையை மணம்பேசி வந்த வேந்தனுக்கு மணம் செய்துதர மறுத்தனர் அவளுடைய தமையர்.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்


இரு கயல் உண் கண் இளையவளை, வேந்தன்,
தருக! என்றால் தன்னையரும் நேரார், செரு அறைந்து,
பாழித் தோள் வட்டித்தார், காண்பாம், இனிது அல்லால்,
வாழைக்காய் உப்பு உறைத்தல் இல்.   (பாடல்: 338)


இரண்டு மீன்களைப் போன்ற கண்களை உடைய தங்கையை மணம்பேசி வந்த வேந்தனுக்கு மணம் செய்துதர மறுத்தனர் அவளுடைய தமையர். பெண் கேட்டு வந்த வேந்தனை எதிர்த்துத் தோள் தட்டி, போர் முரசு ஒலித்து எதிர்த்து நின்றனர். வாழைக்காய் இயல்பாகக் கனியும் போதே பழமாகச் சுவைக்குமே அன்றி உப்பைக் கூட்டுவதால் காய் கனி ஆகிவிடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com