பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

வெற்றிப் புகழுடைய அரசர்க்கு உயிர் போன்றவர் என்ற தகுதியை எய்திய அமைச்சராக இருந்தபோதிலும் அந்த அமைச்சரை விட அந்தப்புரத்தைக் காவல் காக்கும் கூனர்க்கு அரசரை அடிக்கடி காணுதல் எளிதாக இருக்கும்.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

சிறப்புடை மன்னரைச் செவ்வியான் நோக்கி,
திறத்தின் உரைப்பார்க்கு ஒன்று ஆகாதது இல்லை,
விறற் புகழ் மன்னர்க்கு உயிர் அன்னரேனும்
புறத்து அமைச்சின், நன்று, அகத்துக் கூன்.  (பாடல்: 295)

வெற்றிப் புகழுடைய அரசர்க்கு உயிர் போன்றவர் என்ற தகுதியை எய்திய அமைச்சராக இருந்தபோதிலும் அந்த அமைச்சரை விட அந்தப்புரத்தைக் காவல் காக்கும் கூனர்க்கு அரசரை அடிக்கடி காணுதல் எளிதாக இருக்கும். எனவே, சிறப்புடைய அரசரை நேரில் தகுந்த காலத்தில் சந்தித்துத் தகுந்தபடி உரியவற்றை எடுத்துச் சொல்வார்க்கு முடியாதது எதுவும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com