

பலர் கூடி நிற்கும் பகை வலிது
ஒன்னார் அடநின்ற போழ்தின், ஒரு மகன்
தன்னை எனைத்தும் வியவற்க துன்னினார்
நன்மை இலராய்விடினும், நனி பலர் ஆம்
பன்மையின் பாடு உடையது இல். (பாடல்: 306)
பகைவர்கள் போர்மேல் வந்தபோது அவனை எதிர்த்து நிற்கும் தலைவன் தனிமைப்பட்டுத் தன்னைத்தானே செருக்கி நிற்றல் கூடாது. போருக்கு வந்தவர் நல்லவர் அல்லர் என்றாலும் மிகப் பலராய் இருத்தல் கூடும். பலராகக் கூடி இருத்தலே ஒரு பலம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.