

தமராலும் தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி,
நிகராகச் சென்றாரும் அல்லர், - இவர் திரை
நீத்த நீர்த் தண் சேர்ப்ப - செய்தது உதவா தார்க்கு
ஈத்ததை எல்லாம் இழவு. (பாடல்: 307)
பரந்த அலைகளை உடைய கடற்கரைத் தலைவனே! உறவினர்களாலும், நண்பர்களாலும் ஒருவர்க்குத் துன்பம் நேருமானால் அவர்களுக்கு உதவி செய்து வாழ்வோர் இல்லை. உதவி செய்ததை நன்றியுடன் போற்றாதவர்க்கு உதவிகள் செய்தால் அவற்றால் ஒரு பயனும் இல்லை. நன்றி கொன்றவர்க்கு உதவுவதால் நன்மை இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.