

பாற்பட்டு வாழ்வர் எனினும், குடிகள்மேல்
மேற்பட்ட கூட்டு மிகை நிற்றல் வேண்டாவே,
கோல் தலையே ஆயினும் கொண்டீக! காணுங்கால்,
பால் தலைப் பால் ஊறல் இல். (பாடல்: 333)
அரசர் குடிமக்களிடம் அவ்வப்போது வரி வாங்கி விடுதல் வேண்டும். நெல் மணிகள் அரியப்பட்ட தாளிலே இருக்கின்றன என்பதற்காகக் காலம் கழித்து அறுவடை செய்தல் கூடாது. அவை தரையில் உதிர்ந்து விடும். பசுமாட்டு மடியில் பால் இருக்கிறது. எனவே சில நாள் இருந்துவிட்டுப் போகட்டும் என்று இருந்துவிடக் கூடாது. முதல்நாள் பாலை அது மறுநாள் சேர்த்துத் தருவது இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.