
முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டோர்
விழவு ஊரில் கூத்தேபோல் வீழ்ந்து அவிதல் கண்டும்,
இழவு என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம்,
அழகொடு கண்ணின் இழவு. (பாடல் 343)
கண்களை இழந்த குருடன் மிக அழகாக இருப்பினும் அவன் தன் அழகை அறியவும் முடியாது, உணர்ந்து அனுபவிக்கவும் முடியாது. ஊரில் திருவிழா நடந்தபோது கூத்தும் நடத்தப்பெற்றது. கூத்து முடிந்தவுடன் கூடி இருந்த மக்கள் ஒவ்வொருவராகக் கலைந்தனர். அதுபோல ஈயாதான் செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போய் ஒருநாள் முழுமையும் இல்லாமல் போய்விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.