
வெறியார் வெங்களத்து வேன்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.
(பாடல் 16 அதிகாரம்: இளமை நிலையாமை)
வெறியாட்டமானது ஆடுதல் நிகழ்கின்ற கொடிய பலியிடுமிடத்திலே வேலை ஏந்தி வெறியாடுவோனாகிய வேன்மகனின் கையில் உள்ள தளிர்கள் நிறைந்த நறுமணமுடைய பூமாலையானது தன் முன்னே விளங்கிக் கொண்டிருக்கக் கண்ட ஆட்டுக் குட்டியானது, அந்தத் தளிரை உண்பது போன்ற நிலையில்லாத மகிழ்ச்சியினை உடையது இளமைப் பருவத்து இன்பங்கள் எல்லாம்.
அத்தகைய மகிழ்ச்சி அறிவுடையவர்களிடத்திலே ஒருபோதும் இருப்பதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.