காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

இளமையில் துறவு

இல்லத்திலிருந்து மனையாளோடும் வாழ்வதாகிய மனை வாழ்க்கை, அந்த வாழ்வினைத் துய்த்து இன்புறுகின்ற இளமைப் பருவம், சமூகத்திலே ஏற்படுகின்ற செல்வாக்கு, உடலின் வலிமை...

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 11:48 am

இல்லம், இளமை, எழில், வனப்பு, மீக்கூற்றம்,

செல்வம், வலி, யென் றிவையெல்லாம்,}மெல்ல

நிலையாமை கண்டு, நெடியார், துறப்பர்

தலையாயார் தாமுய்யக் கொண்டு.

( பாடல் 53 அதிகாரம்: துறவு )

இல்லத்திலிருந்து மனையாளோடும் வாழ்வதாகிய மனை வாழ்க்கை, அந்த வாழ்வினைத் துய்த்து இன்புறுகின்ற இளமைப் பருவம், சமூகத்திலே ஏற்படுகின்ற செல்வாக்கு, உடலின் வலிமை எனப்படுகின்ற இவை எல்லாம் நிலைத்திராமையை அமைதியாக ஆராய்ந்து பார்த்து மேலோர்கள், தாங்கள் பிறவித் துன்பங்களினின்றும் கடைத் தேறுவதற்கான வழிகளை மேற்கொள்ளுதலில் காலத்தை நீட்டியாதவராக, இளமையிலேயே உலகப் பற்றினை துறந்து விடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.