கொன்னே கழிந்தன்று இளமையும்! இன்னே
பிணியொடு மூப்பும் வருமால்;-துணிவொன்றி
என்னொடு சூழாது, எழுநெஞ்சே! போதியோ,
நன்னெறி சேர, நமக்கு?
( பாடல் 55 அதிகாரம்: துறவு )
இளமையாகிய சிறந்த பருவமும் வீணே கழிந்து விட்டது. இப்பொழுதே நோய்நொடியொடு கிழத்தனமும் வந்து நம்மைச் சேர்ந்து விடும். ஆதலால், துணிவினைப் பொருந்தி, என்னொடும் ஆராயாமல் எழுகின்ற நெஞ்சமே! நமக்கு நல்ல வழியானது கிடைப்பதற்கு இப்போதாவது முயற்சி செய்யப்போகின்றாயோ, அல்லவோ? டஇளமையிலே, அதன் வழியாக நின்று உலக இன்பங்களிலே உழன்ற ஒருவன், நன்னெறியை நாடியவனாக, முதலிலே தன் மனத்தைத் தன் வழிப்படுத்த இப்படிச் சொல்கிறான்' என்று கொள்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










