சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

இலக்கியம் காட்டும் ஓரின மலர்த் தேன்

சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட நமது மருத்துவ முறைகளுடன் சீனா, ரஷியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் வழக்கில் உள்ள அனைத்துப் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் தேன் முக்கிய இடம் பெறுகிறது.

கோப்புப் படம்

Updated On :

சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட நமது மருத்துவ முறைகளுடன் சீனா, ரஷியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் வழக்கில் உள்ள அனைத்துப் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் தேன் முக்கிய இடம் பெறுகிறது.

தேனானது இந்த மருந்துகள் வயிற்றுப் பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தாமல், முழுமையாக ரத்தத்தில் கலக்கும் தன்மையைப் பெறுகிறது. இத்தகைய தேனின் பயன்பாடும் பெருமையும் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.

பல்வேறு மலர்களில் இருந்து மதுரத்தையும் மகரந்தத்தையும் சேகரித்து தேனீக்கள் தேனைத் எடுக்கின்றன. எனவே, தேன் பொதுவாக பல மலர்களின் மகரந்தங்கள் கலந்த கலவை எனலாம். ஆனால், நவீன முறை தேனீவளர்ப்பு முறையில் நாம் இன்று நாவல் தேன், அகேசியா தேன், முருங்கைத் தேன் எனக் குறிப்பிட்ட தாவரப் பூக்களிலிருந்து சேகரிப்பட்ட மகரந்தத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒற்றை மலர்த் தேன் பயன்பாட்டில் உள்ளது.

இத்தகைய ஒரு மலர்த் தேனின்

பயன்பாடு சங்க காலத்தில் இருந்தது. குறுந்தொகையில்,

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

(குறுந். 3)

என்னும் அடிகள் மூலம் அறியலாம்.

தேவ குலத்தாரால் குறிஞ்சித் திணையில் பாடப்பட்ட இப்பாடல் தலைவன்மீது மிகுந்த காதலையும் அன்பையும் கொண்ட தலைவி, தன்னைக் காண வந்த தலைவன் காதில் விழுமாறு, தன்னுடைய காதலையும் அன்பையும் தோழியிடம் கூறியதாக அமைந்துள்ளது. மலைப் பக்கத்தில் உள்ள கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு, பெருமளவில் வண்டுகள் தேனைச் செய்வதற்கு ஏற்ற இடமாகிய நாட்டை உடைய தலைவனுடன் உள்ள தன்னுடைய நட்பானது, பூமியைக் காட்டிலும் பெரியது; ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது; கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது என்பதாகும்.

இங்கு குறிஞ்சி மலர்களைக் கொண்டு தேனீக்கள் சேகரித்த தேனானது 'தனிப் பூந்தேன்' ஓர் இன மலரால் தயாரிக்கப்பட்டது என்பது அறிவியல்பூர்வமாக கவனிக்கத்தக்கதாகும்.

இதுபோல, நற்றிணையில் பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி கூற்றாக வரும் கபிலர் பாடிய குறிஞ்சித் திணைப் பாடலில்,

தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,

புரைய மன்ற புரையோர் கேண்மை.

(நற்.1)

என்ற அடிகள் மூலம், தாமரைப் பூவின் குளிர்ச்சியான மகரந்தத் தாதுவைக் கொண்டு செய்யப்படும் ஒரு மலர்த் தேனும் உயர்வானது என்பது பாடலடிகள் மூலம் புலப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.