உருவானது முரசு புயல்! வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! வரலாற்றை மாற்ற வேண்டாம்: திமுக ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி!ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது!வணிக சிலிண்டர் விலை உயர்வு!இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும்: டி.கே. சிவகுமார்

சங்க காலத்தில் மழைமானி

சங்க காலத்தில் திரவப் பொருள்களை அளந்துகாண சேர், படி, மரக்கால் போன்ற பாத்திரங்களாகிய அளவுக் கருவிகள் வழக்கில் இருந்தன.

கோப்புப் படம்

Updated On :

சங்க காலத்தில் திரவப் பொருள்களை அளந்துகாண சேர், படி, மரக்கால் போன்ற பாத்திரங்களாகிய அளவுக் கருவிகள் வழக்கில் இருந்தன.

ஆனால், பெய்யும் மழையின் அளவை அளந்தறியும் அளவுக்குக் குறியீடுகள் பொறிக்கப்பட்ட மழைமானிகள் இல்லை.

அதே போல, குளம் மற்றும் ஆறுகளில் நீரின் அளவைத் துல்லியமான அளவீடுகளில் கூறும் நுட்பமும் இல்லை. 'கனஅடி' போன்ற நீர் அளவை முறைகள் பிற்காலத்தில்தான் வழக்கிற்கு வந்தன.

தற்காலத்திலோ, வெட்டவெளியான, உயர்ந்த இடத்தில் செ.மீட்டர்., மி.மீட்டர் போன்ற அளவுக் குறியீடுகள் பொறிக்கப்பட்ட சோதனைக் குழாய் போன்ற கண்ணாடியாலான 'மழைமானி'கள் வைக்கப்படுகின்றன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத்தில், மன்னனின் அரண்மனையின் உயரமான இடத்தில் ஓர் மழையளவுக் கருவி போன்ற அமைப்பு அமைக்கப்பட்டிருந்ததை 'நெடுநல்வாடை' இலக்கியம் அழகாகக் குறிப்பிடுகின்றது.

பத்துப்பாட்டுள் ஒன்றான அவ்விலக்கியத்தைப் பாடிய நக்கீரர், அதில், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் அரண்மனைத் தோற்றத்தைச் சிறப்புறப் பாடியுள்ளார்.

ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை

வென்றெழு கொடியொடு வேழஞ்

சென்றுபுகக்

குன்றுகுயின் றன்ன ஓங்குநிலை வாயில்

.............

நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை

குறுங்கால் அன்னமோடு உகளும்

முன்கடைப்

பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி

புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு

குரலொடு

நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண்

முற்றத்துக்

கிம்புரிப் பகுவாய் அம்பண நிறையக்

கலழ்ந்துவீழ் அருவிப் பாடிறந் தயல

(அடிகள் 86-97)

என்பன அவ்வடிகள்.

அரண்மனையின் மேல் பகுதியில், நிலாவின் பயனை அரசன் கொள்ளக் கூடிய வெள்ளிய 'நிலாமுற்றம்' இருந்தது. அதன் ஓரிடத்தில், பிளந்த 'மகரவாய்' (முதலையின் வாய்) போன்றமைந்த நீர்ப்பந்தல் என்ற அமைப்பு மழை நீரால் நிறைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அம்பணம் என அப்பாட்டிற்பகுதியில் குறிக்கப்பட்டுள்ளது. 'இது ஓர் அளவுக் கருவியுமாகும்' என்கிறார் அதன் உரையாசிரியர்களுள் ஒருவரான பொ.வே.சோமசுந்தரனார் (கழகப்பதிப்பு 2008,பக். 53).

மழைப் பொழிவைத் துல்லியமாகக் கணக்கிடும் கருவிகள் அக்காலத்தில் இல்லையென்றாலும், அதிக அளவு மழைபெய்யும் பொழுது 'அம்பணத்தில்' நிறையும் அந்நீரைக் கொண்டு மழையின் அளவைத் தெரிந்து கொண்டனர் எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.