இறைவனுக்கு ஏற்புடைய தவக் காலம்
ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவிற்கு முன்னதாக வரும் நாற்பது நாட்களை "தவக் காலம்' என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஜெபத்திலும், தவ முயற்சிகளிலும் நேரத்தைச் சிறப்பாகச் செலவிட இறைவனை


ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவிற்கு முன்னதாக வரும் நாற்பது நாட்களை "தவக் காலம்' என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஜெபத்திலும், தவ முயற்சிகளிலும் நேரத்தைச் சிறப்பாகச் செலவிட இறைவனை அழைக்கும் சிறப்பு மிக்க காலம் இந்தத் தவக் காலம். "இறைவனுக்கு ஏற்ற தவம் அல்லது நோன்பு என்பது எது?' என்ற கேள்விக்கு விடை பைபிளிலேயே உள்ளது.
""ஒருவன் சாக்கு உடையையும், சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு.'' (எசயா 58: 5-7.)
""சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும், பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால்... ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழி நடத்துவார்.'' (எசயா 58: 9-11.)
ஆம்! வெளிப்படையான ஆர்ப்பாட்ட அடையாளங்களையும், பகட்டான விளம்பரங்களையும் இறைவன் என்றுமே விரும்புவதில்லை. பைபிளில் இருக்கும் இதனை விளக்கும் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போமா?
""இருவர் இறைவனிடம் வேண்டக் கோயிலுக்குச் சென்றனர். ஒருவர் இறை வல்லுநர்; இன்னொருவர் வரி வசூலிப்பவர். இறை வல்லுநர் பீடத்துக்கு முன் சென்று, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: "கடவுளே! நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ, இந்த வரி தண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் பத்தில் ஒரு பங்கை உமக்குக் கொடுக்கிறேன்.'
ஆனால் வரி தண்டுபவர் வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, "கடவுளே! பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்று வேண்டினார்.
இயேசு தம் சீடரை நோக்கி, "உண்மையாக உங்களுக்குக் கூறுகிறேன். இறை வல்லுநரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்' என்றார்.'' (லூக்கா 18:10-14)
உண்டு, உறங்கி, இன்பம் துய்த்து கல்லறையில் அடங்கப் போகும் வாழ்க்கையை மிருகங்களும்கூட வாழவில்லையா? தன் உயிர் மூச்சையே தந்து, மனிதனுக்கு ஆறறிவையும் கொடுத்திருக்கிறார் இறைவன். இது வெறும் மிருகங்களைப் போன்ற வாழ்க்கை வாழ மட்டுமா? இந்தத் தவக் காலத்தில் (பிப்ரவரி 17ல் சாம்பல் புதனோடு தொடங்கியது) இதைப் பற்றிச் சிந்திப்போம்.
சாம்பல் புதனன்று மக்களின் நெற்றியில் பூசப்படும் சாம்பல் நினைவுப்படுத்துவது மனிதனின் நிலையாமையைத்தான். "மண்ணிலிருந்து உருவான மனிதனே! நீ மண்ணாகப் போகப் போகிறாய்' என்ற வார்த்தைகளோடுதான் நெற்றியில் சாம்பல் பூசப்படுகிறது. நிலையற்ற இவ்வுலகில் வாழும் கொஞ்ச காலத்திலே வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் சிறு சிறு தியாகச் செயல்கள் செய்வோம்; அயலாரை நேசிப்போம். அதன் மூலம் இறைவன் பால் உள்ளம் உயர்த்துவோம்; உயர்வடைவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...