காஞ்சிபுரத்திலிருந்து அம்மன் புறப்பட்டு பல தலங்களுக்கும் úக்ஷத்திராடனம் சென்றாள். அப்போது திருவாரூர் வந்தவள் கமலாலயம் திருக்குளத்தில் நீராடினாள். அங்கிருந்து புறப்பட்டு வரும் வழியில் இரவானதால் ஒரு கிராமத்தில் அத்தி மரத்தடியில் தங்கினாள். அந்த கிராமமே "மேலத்தென்குடி' என்று அழைக்கப்படுகிறது. அம்மன் தங்கியதால் இவ்வூருக்கு "தங்குடி' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே தற்போது மருவி "தென்குடி' என்று அழைக்கப்படுகிறது.
காத்தவராயன்: "திருமலைராஜன்' என்று அழைக்கப்படும் ஆற்றில் ஒரு பெட்டி மிதந்து வந்தது. அதைக் கண்டெடுத்து கிராம மக்கள் திறந்து பார்த்தனர். அதில் இருந்த காத்தவராயன் விக்ரகத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்தவர்கள் அதை மாரியம்மன் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்து காவல் தெய்வமாக வழிபடுகின்றனர்.
தண்டனை: நந்தவனத்திலிருந்து பூக்களைப் பறித்து வந்து மாரியம்மனை பூஜித்தனர் மக்கள். வானுலகத்திலிருந்து தினமும் வந்த சப்த கன்னிகள் அங்கிருந்த குளத்தில் நீராடி, நந்தவனப் பூக்களைப் பறித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் அம்மனின் பூஜைக்கான பூக்கள் குறைந்தன. சப்த கன்னிகள் பூக்களைப் பறித்துச் செல்வதை அறிந்த காத்தவராயன் சினமுற்றார். சப்த கன்னிகள் ஒருவரின் உடையை எடுத்து மறைத்து வைத்துவிட்டாராம். இதனால் கோபமுற்ற அம்மன், காத்தவராய சுவாமியிடம் கீழத் தென்குடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெறும் தீமிதி உற்ஸவத்தில் தீ மிதித்து வர வேண்டுமென கட்டளையிட்டாள்.
அதன்படி இன்று வரை ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று 10 நாள்கள் கீழத் தென்குடி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்ஸவம் நடக்கிறது. அப்போது காத்தவராயன் சுவாமி தேர் போன்று அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வருகை தந்து தீ மிதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
வழக்கமாக எல்லா அம்மன் கோயில்களிலும் தீமிதி உற்ஸவம் சூரிய அஸ்தமன வேளையில் தான் நடைபெறும். ஆனால் இந்த ஊரில் விடியற்காலை சூரிய உதயத்தின் போது தீ மிதி நடைபெறுகிறது.
குடமுழுக்கு: மேலத் தென்குடியில், அத்திமரத்தடியில் தங்கிய அம்மன் தன்னை வழிபடும் பக்தர்களின் குறைகளை நீக்கி வளமான வாழ்க்கையை வழங்கிக் கொண்டிருக்கிறாள். இக்கோயிலுக்கு 12 ஆண்டுகள் கழித்து, வருகிற ஜூலை 8ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. ஜூலை 6ஆம் தேதி காலை யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.
மேலும் தகவலுக்கு 94426 88495.
அமைவிடம்: திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் 18வது கிலோ மீட்டரில் உள்ள செறுவளூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து மேற்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருமலைராஜன் ஆறு. இதன் வடகரையில் அமைந்துள்ளது மேலத்தென்குடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


