இறைவனுக்கு உகந்த வாழ்க்கை!
மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் காரணிகள் எண்ணற்றவையாக இருப்பினும் கவலைப்படுதல் என்பதே மிக முக்கியமான ஒன்றாகும்.


மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் காரணிகள் எண்ணற்றவையாக இருப்பினும் கவலைப்படுதல் என்பதே மிக முக்கியமான ஒன்றாகும். கவலை ஒரு மனிதனின் வாழ்நாளைக் குறைக்கிறது. தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளால் வாழ்வையே நரகமாக மாற்றுகிறது. ஆனால் பைபிளில் இயேசு என்ன கூறுகிறார் தெரியுமா?
""உயிர் வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும், உடையை விட உடலும் உயர்ந்தவை அல்லவா? காகங்களைக் கவனியுங்கள். அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை. அவற்றுக்கு சேமிப்பறையுமில்லை. களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா (லூக்கா 12:22-24)''.
"கவலைப்படுவதால் எவரும் தம் உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியுமா?' என்று கேட்கிறார் இயேசு. ""காட்டுச் செடிகள் எப்படி வளர்கின்றன என கூர்ந்து கவனியுங்கள். அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை; ஆனால் சாலமோன்கூட அவற்றில் ஒன்றைப்போல் அணிந்ததில்லை. இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்கு கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் மிகுதியாகச் செய்வார் அல்லவா? ஆதலால் எதை உண்பது, எதைக் குடிப்பது என நீங்கள் தேடிக்கொண்டிருக்க வேண்டாம்; கவலை கொண்டிருக்கவும் வேண்டாம் (லூக்கா 2;27,28)''.
ஆனால், "கவலைப்படாதீர்கள்' என்று கூறும் இயேசு, ""சோம்பேறித் திரியுங்கள்'' என்று கூறவில்லை. ""உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள். அப்பொழுது திருச்சபைக்கு வெளியே இருப்பவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பிறர் கையை நம்பாதபடி வாழ்வீர்கள் (1 தெசலோனிக்கர் 4:11,12). "உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது (11 தெசலோனிக்கர் 3:10)'' என்று அறிவுரை கூறுகிறார்.
எனவே வீண் கவலையை விட்டொழித்து உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும் எவனும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்கிறான் என்பதில் சந்தேகமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...