தென்னகத்து துவாரகை' என்று பக்தர்களால் போற்றப்படுகிறது அம்பலப்புழா கிருஷ்ணர்கோயில். குழந்தை கிருஷ்ணர் வடிவில் மூலவர் இங்கு காட்சி தருகிறார்.
செம்பகக் கேசரி என்ற பகுதியை ஆண்ட "ஸ்ரீபூராடம் திருநாள் தேவ நாராயணன் தம்புரான்' என்ற மன்னன் இந்தக் கோயிலைக் கட்டியதாகத் தல
வரலாறு.
திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது குருவாயூர் கிருஷ்ணன் விக்ரகத்தை இங்கு வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். பால் பாயசம் இங்கு பிரசித்தி பெற்றது. குருவாயூரில் காலையில் பால் பாயசம் சாப்பிடும் கண்ணன் மதியம் அம்பலப்புழாவிற்கு பால் பாயசம் சாப்பிட வருவதாக
ஐதீகம்.
இந்தக் கோயிலில் மதியம் பக்தர்களுக்கு பிரசாதமாக பால் பாயசம் வழங்கப்படுகிறது. "ஓட்டம் துள்ளல்' என்ற கலை இங்கிருந்து வந்தது எனச் சொல்கிறார்கள். துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் மலையாள மொழியின் முன்னோடி. அவர் இங்குதான் மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை மலையாளத்தில் மொழி
பெயர்த்தார்.
மலையாள மீனம் மாதத்தில் அம்பலப்புழா ஆறாட்டு 10 நாட்கள் நடைபெறும். திருவோண நட்சத்திரத்தன்று ஆறாட்டு நடைபெறுகிறது.
தேசிய நெடுஞ்சாலை 47ல் ஆலப்புழாவிலிருந்து 14 கி.மீ. தெற்கே உள்ளது அம்பலப்புழா கிருஷ்ணர் கோயில். எர்ணா குளத்திலிருந்து 108 கி.மீ. தொலைவில் உள்ளது.
கேரளாவில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் குருவாயூருக்கு அடுத்து புகழ் பெற்று விளங்குகிறகு அம்பலப்புழா கிருஷ்ணர் கோயில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


